எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பண மதிப்பிழப்பு நட வடிக்கையை 2016 நவம்பர் 8 ஆம் தேதி  இரவு மோடி அறிவித்தார். அன்றிலிருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட் டது. ஆனால், பண மதிப் பிழப்பு ஊருக்குத்தான், பணக்காரர்களுக்கல்ல. நவம்பர் 16 ஆம் தேதி கருநாடக மாநிலத்தின் முன் னாள் பா.ஜ.க. அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன் ரெட்டி தனது மகளின் திருமணத்தை 500 கோடி ரூபாய் செலவில் ஓகோவென்று, ஜாம் ஜாமென்று' நடத்தினார்.

இந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழில் தொடங்கி, ஆடம்பரத்திற்கு எங்கும் குறை வைக்கவில்லை. தன்னை விஜயநகர அரசரான கிருஷ்ணதேவராயரின் மறுபிறப்பு என்று எண்ணிக் கொள்ளும் ரெட்டி தன் மகளின் திருமணத்திற்காக விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை பெங்களூரு அரண்மனைத் திடலில் உருவாக்கினார்.

மேடை முழுவதும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், மணமகனுக்கும், மணமகளுக்கும் புதிய 2000 ரூபாய் நோட்டினால் மாலை அணிவித்திருந்தனர். மேடை அலங்காரம் மற்றும் மாலைகளுக்கு மட்டுமே 87 லட்சத்திற்கும் மேல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன. நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பிற்குப் பிறகு, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது; அதுவும் ஒரு நபருக்கு 4000 ரூபாய்க்குமேல் கிடை யாது என்று கூறப்பட்ட நிலையில், ரெட்டி வீட்டுத் திருமணத்திற்கு மட்டும் சுமார் ஒரு கோடிக்கு புதிய 2000 ரூபாய் தாள்கள் சென்றுள்ளது எப்படி?

மணமகளின் திருமணப் புடவையின் விலை மட் டுமே 17 கோடி ரூபாயாம், அத்துடன் திருமணப் பெண் அணியும் ஆபரணங்களின் விலை 90 கோடி ரூபாய் மதிப்புடையனவாம்! இத் தகைய ஆடம்பரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக் கும் இந்த ஜனார்த்தன் ரெட்டி முன்னாள் பா.ஜ.க. அமைச்சராவார். பா.ஜ.க.வின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான நிதின் கட்காரி இந்த மாமன்னர்(?) வீட் டுத் திருமணத்தில் கலந்து கொண்டார் என்பதுதான் அதிமுக்கியம்!

பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் உண்டா? என சவால் விடுகிறார்களே, பி.ஜே.பி., பிரமுகர்களிடம் புதிய 2000 ரூபாய் நோட்டு ஒரு கோடி எப்படி சேர்ந்தது?

இதில் ஊழல் புகுந்து விளையாடவில்லையா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner