எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோட்சேயும் - குருமூர்த்தியும்!

கேள்வி: மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேயின் இந்தியா வேண்டுமா? என்று மக்களைப் பார்த்து கேட்கிறாரே ராஹூல் காந்தி?

பதில்: கோட்சேவின் இந்தியா வேண்டுமா?' என்று கூறியது ஹிந்து மகாசபை. அது இருந்த இடம் தெரியவில்லை என்பது ராஹூல் காந்திக்குத் தெரியவில்லை. எனவே, கோட்சே இந்தியா வேண்டும்' என்று கேட்பதற்கு யாரும் இல்லை என்பதும் அவருக்குத் தெரியவில்லை.

- துக்ளக்', 3.4.2019,

பக்கம் 26

சங் பரிவார்கள் பச் சோந்தி போல உருமாறிக் கொள்ளக் கூடியவைதான் - எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை கள்தான்.

பல பெயர்களை வைத்து நான் அது அல்ல - அது நானல்ல! என்று கூறும் சூழ்ச்சிக்காரர்கள் இப்படித்தான் பல நாக்குகளில் பேசுவார்கள்.

கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன்தான் என்பதற்கு வெகு தூரம் செல்லவேண்டாம் - கோட்சேயின் சகோதரனும், காந்தியார் கொலையில் ஆயுள் தண்டனை பெற்றவனுமான கோபால் கோட்சே ஒப்புக் கொண்ட உண்மை. துக்ளக்' குக்குத் தொப்புள் கொடி உற வான தினமலரி'லிருந்தே எடுத்துக்காட்டலாமே!

நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே சமீ பத்தில் ஹைதராபாத்தில் பேட் டியளித்தபோது, ஆர்.எஸ்.எஸ். தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டன் என்றால் தன் வாழ்நாள் முழுவதும் அதில் முழு மூச்சாக இருக்கவேண்டும். இதற்கு எனது அண்ணன் நாதுராம் கோட்சேவை  உதார ணமாகக் கூறலாம் என்று கூறியுள்ளார் (தினமலர்', 11.2.1988, திருச்சி பதிப்பு).

'தினமலர்' கூறிவிட்டதால் திரிநூல் குருமூர்த்தி அய்யர்வாள் சப்தநாடியும் அடங்கி ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் ரூ.2989 கோடி செலவில் வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியுள்ளாரே பிரதமர் மோடி. - அந்த வல்ல பாய் படேல் ஜனசங்கத் தலை வரான டாக்டர் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து மகாசபை இவ்விரு அமைப்புகளின் நடவடிக்கைகள் காரணமாகத்தான் காந்தியார் கொலை என்ற துயரமான நிகழ்ச்சி நடந்தது என்று எழுதி யுள்ளாரே!

'துக்ளக்'கின் பதில் என்ன?

கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரர் என்று இந்தியா டுடே' ஏட்டின் முதன்மை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அருண்பூரி, பிரபு சாவ்லா, மோகினி புல்வா ஆகியோர்மீது வழக்குத் தொடுக் கப்பட்டது.

இதுகுறித்து டில்லி உயர்நீதி மன்ற நீதிபதி மகேஷ்குரோவர் கூறிய தீர்ப்பு முக்கியமானது. கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எழுதியது குற்றமல்ல என்று தீர்ப்பில் கூறியுள்ளாரே!

‘‘Reference to Godse has RSS member can't be termed defamatory'' (The Hindu, 25.5.2007, Page 15).

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா குருமூர்த்தி குருக் களுக்கு?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner