எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஜன. 2- தேசிய பாதுகாப் புப் படையின் (என்எஸ்ஜி) அதிகாரப்பூர்வ இணையதளத் துக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஊடுருவி, பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கறுப்புப் பூனை கமாண் டோப் படையினருக்கு சொந்த மான, www.nsg.gov.in இணைய தளம் டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை தலை மையகத்தில் இருந்து நிர்வகிக் கப்படுகிறது.

தீவிரவாத தடுப்பு உள் ளிட்ட அதிரடி நடவடிக்கை களை மேற்கொள்ளும் இப் படையின் உருவாக்கம், செயல் பாடுகள் மற்றும் இதர அடிப் படைத் தகவல்களும், அறிவிப் புகளும் இந்த இணைய தளத் தில் அதிகாரபூர்வமாக இடம் பெற்றுள்ளன.

திடீரென இந்த இணைய தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிரா கவும் அவதூறான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு, இணைய பக்கம் உருக்குலைக்கப்பட்டது.

‘அலோன் இன்ஜெக்டர்’ என்ற பெயரில் ‘ஹேக்கிங்’ மூலம் இணைய தளத்துக்குள் ஊடுருவிய நபர்கள், முகப்புப் பக்கத்திலேயே கண்டிக்கத்தக்க கருத்துகளைப் பதிவு செய்திருந் தனர்.

காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்ற முழக்கத்து டன், அப்பாவி பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண் மூடித்தனமாக தடியடி நடத்தும் புகைப்படம் ஒன்றும், இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

நேற்று காலை இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதி காரிகள், உடனடியாக இணைய தளத்தை முடக்கினர். பாகிஸ் தானைச் சேர்ந்த ஹேக்கர்கள், இந்த சைபர் தாக்குதலில் ஈடு பட்டிருக்கக்கூடும் என சந்தே கிக்கப்படுகிறது. இது குறித்து தேசிய தகவல் மய்யத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இணைய தள சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner