எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன. 2- புதிதாக ரூ.2,000 நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்திருப்பதற் கான காரணத்தைக் கூற வேண் டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள் ளார்.

இதுதொடர்பாக, அவர்

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவை ஒழிக் கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். ஆனால், கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, உயர் மதிப் புடைய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்ததற்கு எதிர்பார்த்த அள வுக்கு பலன் கிடைக்கவில்லை. எனவே, பிரதமர் மோடியின் நடவடிக்கை தோல்வியைடந்து விட்டது.

கருப்புப் பணத்தை ஒழிப்ப தற்கும், புதிதாக ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தி ருப்பதற்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்விக்கு மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக, பெரும் தொழி லதிபர்களும், கடன் கொடுப்ப வர்களும் வங்கிகளின் வாசல் களில் வரிசையில் நின்றிருந் தால், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருப்ப தாக பொதுமக்கள் உணர்ந்தி ருப்பார்கள் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner