எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.3 உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் அண்மையில் நிகழ்ந்த இரு ரயில் விபத்துகளைக் கருத்தில் கொண்டு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத் துடன் கூடிய கருவிகளை கொள் முதல் செய்ய திட்டமிட்டிருப்ப தாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

கான்பூரில் கடந்த 2 மாதங் களுக்குள் அடுத்தடுத்து இரு முறை ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழப் புகள் ஏற்பட்டன. இதனால் ரயில்வே துறையின் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு டில்லியில் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

ரயில்கள் தடம்புரண்டு விபத் துகள் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்து களை நாம் தவிர்க்க வேண்டும். அதற்காக பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேலும் தீவிரப் படுத்த வேண்டும்.

பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும், ரயில் தண்ட வாளங்களில் ஏற்படும் விரிசலை விரைந்து கண்டுபிடிக்கவும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதுதவிர, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபு ணர்கள் தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்குவர்.

ரயில்கள், தண்டவாளங்களை ஆய்வு செய்யும் பணியில் அனைத்து ரயில்வே அதிகாரி களும் தினமும் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற் பாடுகளுக்கான சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளேன் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner