எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.3 அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-4 ஏவுகணை, ஒடிசா மாநிலம், அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டது.

17 டன் எடையுடன் 20 மீட்டர் நீளத்தில் வடிவ மைக்கப்பட்ட இந்த ஏவுகணை, 4,000 கி.மீ. வரை பாயந்து சென்று இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவு கணை, அது தயாரிக்கப்பட்ட நோக்கத்தை நிறை வேற்றியிருக்கிறது என்றும், இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) வட்டா ரங்கள் தெரிவித்தன.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உணவகங்களில் சேவைக் கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல : மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி,ஜன.3 ஓட்டல் மற்றும் உண வக கட்டணங்களுக்கு சேவை கட்டணம் செலுத்துவது கட் டாயம் அல்ல என் றும், விருப்பப்பட் டால் மட்டும் கொடுக் கலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில், ‘டிப்ஸ்’க்கு பதிலாக, உணவு கட்டணம் மீது 5 முதல் 20 சதவீதம்வரை சேவை கட்டணம் வசூலிப்ப தாகவும், சேவை எப்படி இருந்தபோதிலும் அதை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படு வதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன.

இதுகுறித்து இந்திய ஓட்டல்கள் சங்கத்திடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அச்சங்கம், ‘சேவை கட்டணம் செலுத் துவது முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது.

வாடிக்கையாளருக்கு சேவையில் திருப்தி இல்லாவிட்டால், சேவை கட்டணத்தை ரத்து செய்ய சொல்லலாம்’ என்று விளக்கம் அளித்தது. எனவே, சேவை கட்டணம் என்பது விருப் பத்தின் அடிப்படையிலானது என்றே கருதப்பட வேண்டும்.

ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவு கட்டணம் மீதான சேவை கட்டணம் கட்டாயம் அல்ல. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் மட்டும் கொடுக்கலாம். சேவையில் திருப்தி இல்லாவிட்டால், சேவை கட்டணத்தை ரத்து செய்யுமாறு அவர்கள் கூறலாம். இந்த விளக்கத்தை உரிய இடத்தில் எல்லோருக்கும் தெரியும் வகையில் எழுதி வைக்கும்படி, ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

1986-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, வர்த்தக நடவடிக்கைகளில் நியாயமற்ற முறை யையோ, ஏமாற்றும் வழிமுறையையோ பின்பற்றினால், அது நியாயமற்ற வர்த்தக நடவடிக்கையாகவே கருதப்படும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நுகர்வோர் அமைப்பில் வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner