எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடும் வறட்சி, கடன் தொல்லை: விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு

புதுடில்லி, ஜன.8 நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்துவிட்ட நிலை யில், கடந்த ஆண்டு, 8,000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டனர்.

இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் வற்றியதோடு, நிலத் தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந் துள்ளதால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். வரும் கோடையில், நகர்ப்புறங் களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், விவசாய நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் நீர் நிலைகளில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும், நிலத்தடி நீர் மட்டம் வேக மாக குறைந்து வருவதால், விவசாயம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற் கனவே விதைக்கப்பட்ட பயிர்கள் கருகியும், இனி புதிதாக விவ சாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மனமுடைந்துள்ளனர்.

இந்நிலையில், வறட்சி மற்றும் கடன் தொல்லையால், 2014இல், நாடு முழுவதும், 5,650 விவசாயிகள் தற்கொலை செய்த நிலையில், 2015இல் இந்த எண்ணிக்கை, 8,007 ஆக உயர்ந் துள்ளது.

இதுகுறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ள தாவது:

வறட்சி மற்றும் கடன் தொல்லை காரண மாக, 2015ல் நாடு முழுவதும், 8,007 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் தற் கொலையில், மஹாராஷ்டிரா முன்னிலை வகிக் கிறது. அடுத்தபடியாக, கர்நாடகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தெலங்கானாவில், முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரே

அதிக அளவில் தற்கொலை செய்துள்ளதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து, என்.சி.ஆர்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

நாட்டில், 2015இல், 1.33 லட்சம் பேர் தற்கொலை செய்து உள்ளனர். இவர்களில், 70 சதவீதம் பேர், அதாவது, 93 ஆயிரம் பேர், ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறை வாக வருமானம் ஈட்டுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்தவர்களில், 17 சதவீதம் பேர், குடும்பத் தலைவியர். அதே போல், தினக் கூலித் தொழிலாளர்கள் ,விவசாயிகள், விவசாய தொழிலாளர் களே, அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner