எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அலிகார், ஏப்.10  ''மூன்று முறை ஒருவர், தலாக் சொல்லி விட்டால், விவாகரத்து ஆகி விட்டதாக கருத முடியாது,'' என, துணை குடியரசுத் தலை வர் ஹமீத் அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி கூறினார்.

உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அலிகாரில் நடந்த ஒரு நிகழ்ச் சியில் பங்கேற்ற, துணை குடி யரசுத் தலைவர் ஹமீத் அன் சாரியின் மனைவி, சல்மா அன்சாரி, செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

ஒருவர், மூன்று மூறை தலாக் என சொல்வதால் மட்டும், விவா கரத்து செய்துவிட முடியாது. பெண்கள், மற்ற வர்கள் சொல்வதை அப்படியே கேட்க கூடாது. குரானை முழு மையாக படிக்க வேண்டும். தலாக் தொடர்பான கேள்வி களுக்கு அதில் பதில் உள்ளது.

அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள குரானைதான் படிக்க வேண்டும். மொழி மாற் றம் செய்யப்பட்டதை படிக்க வேண்டாம். மவுலானா அல்லது முல்லா சொல்வதை பெண்கள் அப்படியே கேட்கத் தேவையில்லை. குரானை பெண்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner