எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ராஜ்காட் செல்ல முயன்றவர்களுக்கு

தடைடில்லி, ஏப். 10- டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் நேற்று பாடை கட்டி ஊர்வலமாக ராஜ்காட்டின் காந்தி நினைவிடம் செல்ல முயன்றனர். இவர்களை தடுத்த காவல்துறையினர் ஜந்தர் மந் தருக்கு வெளியே செல்ல தடை விதித்துள்ளனர்.

டில்லியின் ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் போராட் டம் நடைபெற்று வருகிறது. அச்சங்கத்தின் தலைவர் அய் யாகண்ணு தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு நேற்று டில்லியின் ஆசாத்பூரில் இருந்து விவசாயிகள் நலவளர்ச்சி சங்கம் சார்பில் 50  பேர் நேரில் வந்து ஆதரவளித்தனர். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இவர்கள் நேற்று (9.4.2017) நாள் முழுவதிலும் ஜந்தர் மந்த ரில் அமர்ந்து போராட்டம் நடத்தி ஆதரவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஒரு இளம் விவசாயி இறந்தது போல் அவரை பாடையில் படுக்க வைத்து ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு ஊர் வலமாக தூக்கிச் செல்லத் திட்டமிட்டனர். இதற்கு முறை யான அனுமதி பெறாமையால் அவர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து கிளம்பும் போது அதன் வெளியேற்றும் சாலை களை டில்லி காவல்துறையினர் மறித்துக் கொண்டனர். இங்கிருந்து விவசாயிகள் யாரும் வெளியேறக் கூடாது எனக் கூறி தடை விதித்து விட் டனர். இதனால், 27ஆம் நாளாக தொடரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் நேற்று பாடையுடன் நீடிக்கிறது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு கூறுகையில்,

எங்கள் கோரிக்கைகளை பிரதமர் நரேந்தர மோடி பெற்று தீர்வளிக்கத் தயாராக இல்லை. எனவே, பாடையுடன் ஊர்வலமாக ராஜ்காட் சென்று நம் தேசத் தந்தையான காந்தி யாரின் நினைவிடத்தில் மனு வும் அளிக்க முடிவு செய்தோம். ஆனால், அதற்கும் டில்லி காவல்துறையினர் எங்களுக்கு தடை விதித்து விட்டனர். எனி னும், துவளாமல் எங்கள் போராட்டம் தொடர்கிறது. எனத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 13 முதல் துவங்கி நடைபெற்ற வரும் போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பது, வங்கிகடன் ரத்து, நதிகள் இணைப்பு, வறட்சிக்கான கூடு தல் நிவாரணம் எனப் பல கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டுள்ளன. இதற்கு தமிழகம் மற்றும் தேசிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner