எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.10- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்தக்கூடாது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்கள வையில் அவசரப் பொது முக்கி யத்துவம் வாய்ந்த பிரச்சினை களை எழுப்பும் நேரத்தில் 7.4.2017 அன்று  டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:

மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளில் மிகவும் பிற்போக்குத்தனமான முறையில் திருத்தங்களைச் செய்து 2017 மார்ச் 31 அன்று சுற்றறிக்கை ஒன்றை மத்திய பணியாளர் பயிற்சித்துறையின் கீழ் வெளியிட்டிருக் கிறது. இதனை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

தகவல் அறியும் சட்டம் சாதாரணமான ஒரு சட்டம் அல்ல. நாடு தழுவிய அளவில் மக்கள் பெரும் திரளாகப் பங் கேற்ற இயக்கத்தின் பின்ன ணியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமா கும். ஊழலுக்கு எதிராகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற் காகவும் போராடும் மக்களின் கைகளில் இச்சட்டம் ஒரு வலு வான கருவியாக இருந்து வரு கிறது. மேலும் ஒரு ஜனநாயக அமைப்பில் தேவையற்ற முறை யில் ஆதிக்கம் செலுத்தி வந்த அதிகார வர்க்கத்தைக் கடிவாள மிடும் முறையிலும் இச்சட்டம் இயங்கிவந்தது. ஆனால், இவற்றை பலவீனமாக்கி டும் விதத்தில் தற்சமயம் மத்திய அரசு இதன் விதிகளில் திருத்தங் களைக் கொண்டு வந்திருக்கிறது.

மத்திய அரசு சட்டத்தின் 12(2)ஆவது பிரிவின் கீழ் முன் மொழிந்துள்ள திருத்தமானது ஆணையத்தின் முன் எவரேனும் புகார் தாக்கல் செய்திருந்து அது நிலுவையிலிருந்தால் அந்த நபர் இறந்துவிட்டால் அந்தப் புகார் மீதான வழக்கு உயிரற்றுப் போய்விடும் என்று கூறுகிறது.

இதன்மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் புகார் அளிப்பவர்களைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கிற கயவர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய விதத்தில் இத்திருத்தம் அமைந்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயல்படுப வர்கள் மீது ஏற்கெனவே தாக்குதல்கள் அதிகரித் துள்ளன. மத்திய அரசின் இந்தத்திருத்தத் தின் மூலம் அது மேலும் அதிக மாகும். 2017இல் மட்டும் இது வரை 375 தாக்குதல்களுக்கும் மேல் நடைபெற்றுள்ளன.

இவற்றில் 56 கொலைகள் ஆகும். 157 நேரடியான தாக்குதல் களாகும். 160க்கும் மேற்பட்ட வை துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களாகும். இவ்வாறு அச்சுறு த்தல்களுக்கு ஆளானவர் களில் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தகைய பயங்கரமான பின்னணியில் வழக்கு தொடுத்தவர் இறந்து விட்டார் என்றால் அந்த வழக்கு உயிரற்றுப் போகும் என்று திருத்தம் கொண்டுவந்தால், கிரிமினல்களுக்கு மிகுந்த ஊக்கம் அளித்ததாக ஆகிவிடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின்கீழ் செயல்படுபவர்களை கிரிமினல்களும், அதிகாரபீடத் தில் உள்ளவர்களும் சேர்ந்தே கொன்றுவிட ஊக்கம் அளித் திடும். இத்தகைய மோசமான ஒரு திருத்தத்தை அரசாங்கமே செய்யலாமா? இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner