எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப். 12- ‘தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை, மத்திய அரசின் சார்பில், யாரும் சந்திக்க முன்வராதது ஏன்,’’ என, மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன், கேள்வி எழுப்பினார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தமிழக விவ சாயிகள், போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம், பிரதமர் அலுவலகம் முன்பாக, நிர்வாணமாக ஓடி, தங்கள் எதிர்ப்பை காட்டினர். நாடு முழுவதும், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று விவசாயி கள், மண்சோறு சாப்பிட்டு, எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாநி லங்களவையில், தமிழக எம். பி.,க்கள் இந்த பிரச்சினையை கிளப்பினர். தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: ஒரு மாத மாக விவசாயிகள் போராடி வருகின்றனர். தங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என, மிகுந்த மன உளைச்சலிலும், விரக்தியிலும், அந்த விவசாயிகள் போராடியதை, நாடே பார்த்தது. பிரச்னையை மாநில அரசு ஏன் தீர்க்கவில்லை என, மத்திய அரசு கேட்கிறது; உண்மை தான். மாநில அரசுக்கு பொறுப்பு உள்ளது தான்; மறுக்கவில்லை. அதேசமயம், தேசிய மயமாக் கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யும் அதிகாரம், மத்திய அரசுக்கு உள்ளதே. எனவே, பிரதமர், இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். குறைந்தபட்சம் மூத்த அமைச்சர்களில் யாரா வது ஒருவரை, தன் பிரதிநிதியாக அனுப்பி, விவசாயிகளி டம் பேச வைக்க வேண்டும். உலகம் முழுவதும் இப்போராட் டம் எதிரொலிக்க துவங்கியுள் ளது. பிற நாடுகள், நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க., - எம்.பி., நவ நீதகிருஷ்ணன், “மத்திய அர சுக்குத் தான், விவசாயிகள் பிரச் சினையை தீர்க்கும் பொறுப்பு உள்ளது” என்றார்.

இதன்பின், மாநிலங்களவை துணை தலைவர் குரியன் பேசி யதாவது: நான் இந்த சபையில், மத்திய அரசிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். விவசாயிகளின் போராட்டத்தை நானும் ஊடகங்கள் மூலம் பார்த்தேன். மனித மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்க விட்டபடி, தினந்தோறும் அந்த விவசாயிகள் போராடுவது, பரிதாபமாக உள்ளது. அவர் களை, மத்திய அரசின் சார்பில் யாரும் சந்திக்கக் கூடாதா; அவர்களிடம் பேச்சு நடத்தக் கூடாதா? இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதிலளித்த, அமைச் சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “விவசாயிகளின் உணர்வை மத்திய அரசு மதிக்கிறது. இந்த பிரச்னை முக்கியமானது தான். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner