எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப். 12- தமிழகம், ஆந்திரா உட்பட தென் மாநில கடலோர பகுதிகளில் கடல் அரிப்பு அதிகரித்து வருவது அண்மை ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் சென்னை, தூத் துக்குடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் அதிக அளவில் பாதிப் படையும் என்பதும் கண்டறிய பட்டிருப்பதாக நாடாளுமன் றத்தில் மத்திய அரசு தெரிவித் துள்ளது.

இதுகுறித்து மாநிலங்கள வையில் நேற்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து பேசியதாவது:

இந்திய கடலோர பகுதி களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து புவி அறிவியல் அமைச் சகம் வருடாந்திர அடிப்படை யில் கண்காணித்து வருகிறது. நிலத்தை நோக்கி கடல் நகர் வது (கடல் அரிப்பு), கடலை நோக்கி நிலம் நகர்வது (நில வளர்ச்சி) மற்றும் நிலையான தன்மை என பல்வேறு பிரிவு களாக இந்த ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது. இதன்மூலம் தென் மாநில கடலோரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத னால் மக்களின் வாழ்விடங்கள் பாதிக்கலாம்.

கடலோர மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வது ஆகி யவை வெகு நிதானமாகவே நடந்து வருகிறது. கடல் அரிப்பு தொடர்பாக தேசிய கடலோர மேலாண்மை மய் யம் தயாரித்த வரைபடத்தின் அடிப்படையில் கண்காணிக்கப் பட்டதில் கர்நாடக மாநிலம் உல்லால் பகுதியில் உள்ள காட்டே புரா கிராமம் தான் அதிக அளவில் பாதிப்பைச் சந் தித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் தாழ்வான பகுதி களில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, மச்சிலிப் பட்டினம், நிசாம்பட்டினம், காக்கிநாடா, பாராதீப், கொச்சி, மும்பை ஆகிய நகரங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.

குறிப்பாக பருவ மாற்றத் தால், ஏற்படும் இத்தகைய இயற்கை மாற்றங்களைக் கட் டுப்படுத்துவது குறித்த முயற் சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள், கடலோர பாதுகாப்பு மற்றும் மேம் பாட்டு ஆலேசனை குழுவுடன் இணைந்து தேவையான பாது காப்பு ஏற்பாடுகளும் எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner