எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.12 முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வாங்கியவர்களும் பயணித்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளான பயணிக்கு, வடக்கு ரயில்வே ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க டில்லி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

“பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் வேறு பயணிகள் பயணிப்பதை தடுக்க வேண் டியது ரயில்வே அதிகாரி களின் கடமை.

அதை ரயில்வே செய்யத் தவறியது சேவைக் குறை பாடா கும்‘ என்றும் டில்லி நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தின் நீதிபதி வீனா பீர்பால் தெரிவித்தார்.

டில்லியைச் சேர்ந்த தேவ் காந்த் 2009ஆம் ஆண்டு மோரி விரைவு ரயிலில் அமிருதசரஸில் இருந்து டில்லிக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

அவருடைய பெட்டியில் முன்பதிவில்லா பயணச்சீட்டு பயணிகளும் பெரு மளவில் உள்ளே நுழைந்து இருக்கை, தரையில் அமர்ந்துள்ளனர். பயணச்சீட்டு பரிசோதகரும், “ரயில் முழுவதும் கூட்டமாக நுழைந்தவர்களை வெளியேற்ற முடியாது’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் தானும் தனது மனைவியும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியதாக தேவ் காந்த் டில்லி நுகர்வேர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தேவ் காந்த் பயணம் செய்த ரயில் பெட்டியில் கூட்டம் ஏறவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் சார்பில் வாதிடப் பட்டது.

ஆனால், மோரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த பிற நபர்களை பயணச்சீட்டு பரி சோதகர் வெளியேற்றிவிட்டார் என்று மற்றொரு ரயில்வே அதிகாரி எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், தேவ் காந்தின் குற்றச்சாட்டை உறுதி செய்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வடக்கு ரயில் வேக்கு உத்தரவிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner