எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஏப்.12 ஏடிஎம் மய்யங்களில் உள்ள டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் மூலம், எத்தனை முறை வேண்டுமானா லும் வாடிக்கையாளர்கள் கட்ட ணமின்றி ரொக்கமாக டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் மாதத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ரொக்கமாக கட்டண மின்றி டெபாசிட் செய்ய முடியும். குறிப்பிட்ட எண்ணிக் கைக்கு மேல் ரொக்க டெபாசிட் செய்தால், பல்வேறு விகிதங்களில் கட்டணம் வசூலிக்கப்படும். பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநிலங்களவை யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணைய மைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் அளித்த பதிலில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

சேமிப்பு கணக்கு வைத்தி ருப்போர் மாதத்துக்கு 3 முறை மட்டும், பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணமின்றி ரொக்க டெபாசிட் செய்யலாம்.
அதற்கு மேல் டெபாசிட் செய்தால், ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் டெபாசிட் செய்யும் வாடிக்கை யாளர்கள், ஏடிஎம் மய்யங்களில் இருக்கும் டெபாசிட் இயந்திரத் தைப் பயன்படுத்தலாம். அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்றார் கங்க்வார்.

நாட்டில் புழக்கத்தில் இருக் கும் பணம் குறித்த கேள்விக்கு, “கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.13.35 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளது’ என்றார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner