எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஏப்.13 சர்வதேச சந்தை யில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட் ரோல் -டீசலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வரும் மே மாதம் 1-ஆம் தேதி அம லுக்கு வரவுள்ளது. இந்த புதிய நடைமுறை 5 நகரங்களில் முதல் கட்டமாக அமலுக்கு வரவுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (அய்ஓசி) தலைவர் பி. அசோக், டில்லியில் பிடிஅய் செய்தியாளரிடம் (புதன்கிழமை) கூறியதாவது:

நாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில், 95 சதவீத விற்பனை நிலையங்கள், அதாவது சுமார் 58 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலை யங்கள், மத்திய அரசுக்குச் சொந்த மான அய்ஓசி, பாரத் பெட் ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ் தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவைகளுக்குச் சொந்தமான வை ஆகும். தேர்வு செய்யப்பட்ட 5 முக்கிய நகரங்களில் மட்டும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல், நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர் ணயம் செய்யும் நடைமுறையை மேற்கண்ட நிறுவனங்கள் அமல் படுத்தவுள்ளன. இதையடுத்து, நாடு முழு மைக்கும் படிப்படியாக இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும்.

முதலில், புதுச்சேரி, ஆந்தி ரத்தின் விசாகப்பட்டினம், ராஜஸ் தானின் உதய்ப்பூர், ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர், சண்டீகர் ஆகிய 5 நகரங்களில் நாள்தோறும் பெட் ரோல்- டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.

நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானதுதான்.

ஆனால், அதை முதலில் பரிசோதனை ரீதியில் செயல் படுத்த வேண்டியுள்ளது. பரிசோ தனை முறையில், இந்த நடை முறை செயல்படுத்தப்பட்டதும், அப்போது அதன் தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள் ளப்படும். பிறகு, இந்த நடை முறை நாடு முழுமைக்கும் எண் ணெய் நிறுவனங்கள் விரிவு படுத்தும். பரிசோதனை முயற்சி, ஒரு மாதத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று பி.அசோக் கூறினார்.

ஆனால், பரிசோதனை முயற்சி எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது குறித்து பி.அசோக் தெரிவிக்கவில்லை. ஆனால், எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியபோது, வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தன.

2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  முதல் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்தியாவில் மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் பெட் ரோல், -டீசல் விலையை எண் ணெய் நிறுவனங்கள் மாற்றிய மைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner