எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.14 உலகளவில், பயணிகள் வாகன பிரிவில், இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக, இந்தியா உள் ளது எனவும், கடந்த ஆண்டில், விற்பனையில் அய்ந்தாவது இடத்தை பிடித்துள்ளதாகவும், சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், 2016இல், 29.66 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகின. இது, 2015இல், 27.72 லட்சமாக குறைந்திருந்தது.

இதையடுத்து, சர்வதேச அளவில், கடந்த ஆண்டில், பயணிகள் வாகன விற்பனையில், இந்தியா, அய்ந்தாவது இடத்தில் உள்ளது.

இதே காலத்தில், சீனாவின் வாகன விற்பனை, 14.93 சதவீதம் உயர்ந்து, 2.12 கோடியில் இருந்து, 2.43 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜெர்மனியின் வாகன விற் பனை, 4.54 சதவீதம் அதிகரித்து, 32.06 லட்சத்தில் இருந்து, 33.51 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதே சமயம், ஜப்பான் வாகன விற்பனை, 1.65 சதவீதம் குறைந்து, 42.15 லட்சத்தில் இருந்து, 41.46 லட்சமாக சரிவ டைந்து உள்ளது.

அமெரிக்காவின் வாகன விற் பனை, 75.16 லட்சத்தில் இருந்து, 68.72 லட்சமாக குறைந்துள்ளது. இங்கிலாந்து வாகன விற்பனை, 26.33 லட்சத்தில் இருந்து, 26.92 லட்சமாக அதிகரித்து உள்ளது. பிரான்ஸ், 2016இல், 20.15 லட்சம் பயணிகள் வாகனங்களை விற் பனை செய்துள்ளது. இது, 2015 இல், 19.17 லட்சமாக இருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner