எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஏப்-.16  உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர மான லக்னோவில் அம்பேத் கர் பிறந்த நாள் விழாவில் மாயாவதி பங்கேற்று உரை யாற்றினார்.

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுக்குப்பின்னர் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி நாடுதழுவிய பாஜக எதிர்ப்பு அணியில் இணைந்திட தயார் என்று அறிவித்துள்ளார்.

Òஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதற்காக, பாஜகவுக்கு எதிரான கூட்டணி யுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறும்போது, “மேன் மேலும் நஞ்சாகி வருவதை நாம் தடுத்து நிறுததியாக வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய் யப்பட்டுவிட்டதால், மக்கள் தாங்கள் விரும்பும் தலைவர் களைத் தேர்ந்தெடுக்க முடி யாமல் போனது. ஆகவே, பிரபலமான வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமா னால், பாஜகவுக்கு எதிரான வலுவான அணி  அவசியம் உருவாக்கப்பட வேண்டும்’’ என்று மாயாவதி பேசிய போது பகுஜன் சமாஜ் கட்சியினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.

மேலும், மாயாவதியின் சகோதரர் ஆனந்தகுமார் கட்சி யின் தேசிய துணைத் தலை வராக பொறுப்பேற்று டில்லி யிலிருந்து கட்சியின் நடவடிக் கைகளில் பங்கேற்பார். தேர் தல் ஆணையத்தின் கூட்டங் களிலும் உரிய ஆவணங்களை அளிப்பதிலிருந்து கட்சியின் பிரதிநிதியாக செயல்படுவார் என்று மாயாவதி குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டில் நடை பெற உள்ள மக்களவைத் தேர்தலில் மோடி மீண்டும் வருவதை தடுத்தி, பாஜக வுக்கு எதிரான மாபெரும் கூட்டணியில் மாயாவதியும் இணைவார் என்று குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner