எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 18- விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று டில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ் ரிவால் வற்புறுத்தி உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய விவசாயிகள் பிரிவு சார்பில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் தமிழக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உள்பட அனைத்து மாநில முக்கிய நிர்வாகிகள் மற் றும் விவசாய பிரிவு நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல் அமைச்சருமான அர விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விவசாயிகளின் பிரச்சினை யில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. அமைதியாக போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக் கிறார்கள். இதே போக்கைத் தான் முன்பு காங்கிரஸ் அரசும் கடைப்பிடித்தது. அதனால்தான் மக்கள் காங்கிரசை புறந்தள்ளி பா.ஜனதாவை ஆதரித்தனர்.

இப்போது பா.ஜனதாவும் அதேபோல் செயல்படுவதால் இரு கட்சிகளும் ஒரே குட்டை யில் ஊறிய மட்டைகள்தான் என்று மக்கள் உணர்ந்துள்ளனர். ஏழைகளை சுரண்டுவதும், ஓட் டுக்காக மக்களை பயன்படுத்து வதும்தான் அந்த கட்சிகளின் வேலை என்பதையும் தெரிந்து கொண்டனர்.

விவசாயிகளை காப்பாற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவ தாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் அதை அமல்படுத்தாமல் விவ சாயிகளின் முதுகில் குத்திவிட் டது. அமல்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் பிர மாண பத்திரமும் தாக்கல் செய்து உள்ளது.

விவசாயிகள் கடனில் தத் தளிக்கிறார்கள். தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு தப் பிச் சென்றுவிடுகிறார்கள். அவர் கள் தப்புவதற்கு அரசும் உதவி செய்கிறது. ஆனால் அப்பாவி விவசாயிகளை பாடாய் படுத்து கிறது.

விவசாயிகளின் பிரச்சினை களை தீர்க்க, விளைபொருட்க ளுக்கு நியாயமான விலை கிடைக்க நாடு முழுவதும் ஆங் காங்கே குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளை தியாகிகளாக அங்கீகரிக்க வேண்டும்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner