எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.12 ஏர் இந் தியா நிறுவனத்தின் பங்குகளை முழுவதுமாக தனியாருக்கு விற்று விட வேண்டும் என்று விமான போக்குவரத்துத் துறையின் ஆலோசனை அமைப்பான சிஏபிஏ அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அரசு வசம் மிகக் குறைந்த அளவு பங்குகள் இருந்தாலும் தனியார் மயமாக்கலுக்குப் பிறகும் அரசின் குறுக்கீடு நிலவ வாய்ப் புள்ளது. இதனால் முற்றிலுமாக விற்பதே நல்லது என்று குறிப்பிட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவன பங்கு களை வாங்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசுக்கு அளித்த பரிந்துரையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உள்ள கடன் சுமையை முற்றிலு மாகக் குறைப்பது மிகவும் அவசியமாகும். நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு களை தனியாருக்கு விற்பனை செய்வதென அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது.

முக்கியமான நிறுவனங் களான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா பிராந்திய சேவை ஆகிய மூன் றையும் முக்கியமாக விற்பனை செய்து விட வேண்டும். இவற் றுடன் ஏர் இந்தியாவுக்கு உள்ள கடன் சுமை முற்றிலுமாக நீக்கப் பட வேண்டும்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறு வனமானது, சர்வதேச அளவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை இயக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத் துடன் தொடர்புடைய பிற துறை களான ஏர் இந்தியா இன்ஜினீயரிங், உணவகம் (தாஜ்சாட்ஸ்), விமான நிலைய களப்பணி, சென்டார் ஓட்டல்ஸ் உள் ளிட்ட நிறுவனங்களை தனித் தனியாக விற்பதன் மூலம் நிறுவனத்தின் கடன் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஏர் இந்தியாவை வாங்க வெளிநாட்டு நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும். இதனால் கூடுதல் விலைக்கு போவதற்கான வாய்ப்பு பிரகாசமடையும். உள் நாட்டு சேவை, வெளிநாட்டு சேவை என தனித்தனியாக பிரிப் பதன் மூலம் இவற்றை வாங்க முன்வரும் நிறுவனங்களின் எண் ணிக்கை குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner