எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.17 சென்னை உள்பட 15 நகரங்களில் இயங்கி வந்த மத்திய கொள்கைக் குழு வின் (நிதி ஆயோக்) மண்டல அலுவலகங்கள் மூடப்பட்டுள் ளன.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள்  கூறிய தாவது: மத்திய அரசின் திட்டங் களை வகுப்பதற்கும், அவற் றைச் செயல்படுத்துவதற்கும் முந்தைய திட்ட ஆணை யத்திற்கு மாற்றாக, மத்திய கொள்கைக் குழு என்ற அமைப் பினை பிரதமர் மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு உருவாக்கினார்.

அந்த அமைப்பானது, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பை உருவாக்குவது, நிதிக் கொள்கையை வகுப்பது, வேளாண்மை மற்றும் கால் நடைப் பராமரிப்பு, விவசாய உற்பத்தி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வந்தது.

அந்த அமைப்பின் மண்டல அலுவலகங்கள், சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை, அய்தராபாத், ஜெய்ப் பூர், சிம்லா, லக்னோ, பாட்னா, கொல்கத்தா, குவாஹாட்டி, அக மதாபாத் உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வந்தன. அந்த அலுவ லகங்கள், மாநில அரசுகளின் பங்களிப்புடன் மத்திய அரசு செயல்படுத்தி வந்த திட்டங் களைக் கண்காணித்து வந்தன.

இந்நிலையில், மத்திய அரசின் நிதியுடன் செயல் படுத்தப்படும் திட்டங்களை பாதியாகக் குறைப்பதற்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான குழு, பரிந்துரை ஒன்றை அளித்தது. அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, திட்டங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது.

சில திட்டங்கள் பாதியி லேயே முடங்கிவிட்டன. அதை யடுத்து, மண்டல அலுவலகங் களின் பணிகளும் குறைந்து விட்டன.
எனவே, சென்னை உள்பட 15 நகரங் களில் இயங்கி வந்த மண்டல அலுவலகங்கள் மூடப் பட்டன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner