எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.19 ரூபாய் நோட்டு திரும்பப் பெறும் நட வடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணியில் 66 அதிநவீன இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிடிஅய் செய்தி யாளர் தாக்கல் செய்திருந்த மனு வுக்கு ரிசர்வ் வங்கி மேற் கண்டவாறு பதிலளித்துள்ளது. அதில், மேலும் கூறப்பட்டுள்ள தாவது:

ரூபாய் நோட்டு திரும்பப் பெறும் நடவடிக்கைக்குப் பிறகு, பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணி சரிபார்ப்பதற்காக, அதி நவீன இயந்திரங்களை வாங்கு வதற்கு சர்வதேச அளவில் ஒப் பந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது.

தற்போது வரை, ரிசர்வ் வங்கி யின் கிளைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும் பணி யில் 59 அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இயந்திரமும், ஒரு மேற்பார்வையாளரின் தலை மையில் 5 பேர் கொண்ட குழு வால் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, 7 இயந்திரங்கள், வர்த்தக வங்கிகளின் கிளைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

7 இயந்திரங்கள் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் வாடகைக் கட்டணம் குறித்து தெரிவிக்க இயலாது.

ஏனெனில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 8(1) பிரிவின்படி, நாட்டின் இறை யாண்மை, ஒருமைப்பாடு, பாது காப்பு, போர் உத்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளிநாடுகளுடனான உறவு ஆகியவற்றைப் பாதிக்கும், குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்களைத் தெரி விக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.

அதன்படி, மதிப்பிழப்பு செய் யப்பட்ட செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள், நிபந்தனைகளின் அடிப்படையில் வங்கிகளில் செலுத்தப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி யை நிறைவு செய்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியிட்ட ஆண்டறிக்கையில், ரூபாய் நோட்டு திரும்பப் பெற்ற நடவடிக்கைக்குப் பிறகு மொத் தம் ரூ.15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளன; இது புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டு களில் 99 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner