எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.20  நுகர்வோர் பொருட்கள், பொறியியல் சாத னங்கள் ஆகியவற்றுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை, மத்திய அரசு கடுமையாக்கியுள் ளது.

இதனால், இவ்வகை பொருட் களை குறைந்த தரத்தில் தயா ரித்து, மலிவு விலையில், இந்தி யாவுக்கு ஏற்றுமதி செய்து வரும் சீனாவுக்கு, பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சீனாவின் மலிவு விலை பொருட்கள் இறக்குமதி குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

பொம்மைகள், மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள், உணவு பதப்படுத்தும் சாதனங்கள், கட்டுமான பொருட்கள், ரசாய னங்கள் ஆகியவற்றுக்கு, புதிய தரக் கட்டுப்பாட்டு விதிகள் அறி முகமாகி உள்ளன.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு தயாரிப்புகள், இந்த விதிமுறை களுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

இந்த கட்டுப் பாடு காரணமாக, இவ்வகை பொருட்களை, அதி களவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா, நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner