எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.21 உலக வில் வித்தை வாகையர் பட்டப் போட்டியில் மகளிருக்கான அணிப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, அதில் கொலம்பியாவை எதிர்கொள் கிறது.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்தியா 232க்கு-227 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

இந்த இந்திய அணியில் திரிஷா தேப், லில்லி சானு, ஜோதி சுரேகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இறுதிச்சுற்று குறித்து ஜோதி சுரேகா கூறுகையில்,

“இறுதிச் சுற்றுக்கு முன் னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரையிறுதியில் விளையாடி யதைப் போன்றே அந்தச்சுற்றிலும் சிறப்பாக விளையாடுவோம். கொலம்பியா அணியும் சிறப்பாக விளையாடக் கூடியது.
எனவே அவர்களுக்கு எதிரான ஆட்டம் விறு விறுப் பானதாக இருக்கும்‘ என்றார்.

இதனிடையே, தனிநபர் பிரிவில் வெளியேற்றும் (எலிமி னேஷன்) ஆட்டத்தில், திரிஷா தேப் 232 புள்ளிகள் பெற்று ரஷ்ய வீராங்கனையையும், லில்லி சானு 233 புள்ளிகள் பெற்று டென்மார்க் வீராங்கனையையும், ஜோதி சுரேகா 232 புள்ளிகளுடன் ஜெர்மனி வீராங்கனையையும் வென்றனர்.

இதில் லில்லி சானு, ஜோதி சுரேகா ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வர, திரிஷா தேப் 17-ஆவது இடத்தைப் பிடித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner