எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.21 கடந்த 2015ஆம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக 25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வு ஒன் றில் தெரியவந்துள்ளது.

மாசு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான லான்செட் குழு என்ற அமைப்பு நடத்திய ஆய் வில், கடந்த 2015ம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக உலகம் முழுவதும் 90 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இது எய்ட்ஸ், மலேரியா, காசநோய்க்கு பலியா னவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம். உல களவில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. அங்கு 25 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது அங்கு 18 லட்சம் பேர் இறந்தள்ளனர். உலகளவில் காற்று மாசு காரணமாக உலகளவில் 6 பேரில் ஒருவர் இறந்து வருகின்றனர். இது வளரும் நாடுகளில் தான் அதிகம் உள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சுற்றுச் சூழல் அமைப்பு ஒன்றின் நிர்வாகி கூறுகையில், உலகமய மாக்கல் நடந்து வரும் நிலையில், நிலக்கரி வெட்டி எடுத்தல் மற்றும் பொருட்கள் உற்பத்தி ஏழை நாடுகளுக்கு சென்று விட்டது. அங்கு சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் அமலாக் கம் ஆகியவை பெரும் சிக்கலாகி உள்ளது. ஏழை நாடுகளில் உள்ள கட்டுமான பணியில் ஈடுபட் டோர் உள்ளிட்ட பல தொழிலா ளர்கள் அதிகளவு காற்று மாசு பாட்டிற்கு பாதிப்படைகின்றனர்.

அதில் இருந்து அவர்களால் பாதுகாத்து கொள்ள முடிய வில்லை. அவர்கள் வேலைக்கு நடந்து செல்லும் போதும், இரு சக்கர வாகனம் அல்லது பஸ்சில் சென்றாலும், வழிகளில் காற்று மாசுபாட்டை அவர்களை பாதிக் கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner