எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.21 ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரயிலில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் கொண்ட மருத்துவக்குழு இருக்க வேண்டும் என உத்தரவிட்டி ருந்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. அந்த வழக் கை உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கார் மற்றும் டீ.ஒய். சந்திரசந்த் மூவர் கொண்ட அமர்வானது விசாரித்தது.

ரயிலில் மருத்துவர் இருப்பது என்பது சாத்தியமில்லாததாகும். மேலும் மருத்துவ கருவிகளை வைக்க முடியாது. இதற்கு முன் நடைமுறைக்கு வந்த பைலட் திட்டம் தோல்வியில் முடிந்தது. மருத்துவ உபகரணங்களை ரயிலில் கொண்டு செல்லும்போது அதன் பயங்கரமான சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக பயன்படுத்த முடியவில்லை.

மேலும், ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் மருந்தகம் மற்றும் மருத்துவ உதவியாளரை நியமிக்க திட்டம் கொண்டு வந்தது. அந்த திட்டமும் தோல்வி யில் முடிந்தது என மூத்த வழக் குரைஞர் அஜிட் சின்கா ரயில்துறை சார்பில் வாதாடினார்

அவரின் விவாதத்தை கேட் டறிந்த அமர்வு, ரயிலில் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அல்லது உதவியாளர்களை நியமிப்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவர்கள் உதவுவார்கள் என தெரிவித்தது.

ரயிலில் மருத்துவ சிகிச் சைக்காக ஆக்சிஜன் உருளை

(சிலிண்டர்)கள் வைத்திருப்பது கட்டாயம். அதன் அடிப்படையில் ரயிலில் பயணம் செய்து கொண் டிருக்கும் போது பயணிகளில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அது குறித்து உடனடியாக டி.டி.ஆர். அல்லது உதவியாளருக்கு தெரியப்படுத்தப் பட வேண்டும். அவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையத் திற்கு தகவல் அளிப்பார்கள். பின்னர் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டதது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner