எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக். 25- பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி இந்தியா) 5 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஒரு பங்கின் விலை ரூ.94 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை தொடங்கவுள்ள இந்தப் பங்கு விற்பனை இரு நாள்கள் நடைபெறும் என்று நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை முதல் பங்குச் சந்தையில் என்எல்சி பங்கு களை முதலீட்டாளர்கள் வாங்க முடியும். 5 சதவீதப் பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.800 கோடி வருவாய் கிடைக் கும்.

முன்னதாக, நடப்பு நிதி யாண்டில் பொதுத்துறை நிறு வனங்களில் இருந்து தனது பங் குகளை விலக்கிக் கொண்டதன் மூலம் மத்திய அரசு ரூ.19,000 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

காப்பீட்டுத் துறையில் ஈடு பட்டுள்ள பொதுத் துறை நிறு வனங்கள் உள்பட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வ தன் மூலம் ரூ.72,500 கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இப்போது நாட்டின் பொரு ளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்டும் நோக்கி லும், பொதுத் துறை நிறுவனத் தில் மத்திய அரசு 75 சதவீதத் துக்கு அதிகமாக பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்ற கொள்கை முடிவின் அடிப் படையிலும் என்எல்சி பங்கு கள் விற்கப்படுவதாகத் தெரிகி றது. என்எல்சி நிறுவனத்தின் 89.32 சதவீதப் பங்குகள் இப் போது மத்திய அரசு வசம் உள் ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner