எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, அக்.26 ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத் தில் மத்திய அரசு அறிவித்தது.

நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண் டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த இணைப்பினை இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் செய்து முடித்து விட வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில் ஆதார் வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று (25.10.2017) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு திட்டங்களின் பலன் களைப் பொதுமக்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் தலைமை வக்கீல் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார்.

வழக்குதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சியாம் திவான், வங்கி கணக்குகளுடனும், செல்போன் எண்களுடனும் ஆதார் எண்ணை இணைப் பதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வாதிடும்போது,  அரசு நலத் திட்டங்களின் பலன்களை பெறுவதற்காக ஆதார் எண்ணை பொது மக்கள் இணைப்பதற்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு மார்ச் 31 என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாலும், வங்கி கணக்குடனும், செல்போன் எண்ணுடனும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் நட வடிக்கை எடுக்க மாட்டோம் என கூறாத தாலும், பிரதான ஆதார் வழக்கு விசார ணையை விரைவில் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் வாதிடுகையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்த வேண்டியது அவசியமானது. ஆதார் எண் இணைக்க விரும்பாதவர்கள் மீது நட வடிக்கை எடுக்க மாட்டோம் என அவர்கள் (மத்திய அரசு) கூறலாம் என்று குறிப்பிட்டார்.
அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், சில விவகாரங்களில் மத்திய அரசின் அறிவுரையை நான் பெற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவரிடம்,  இந்தப் பிரச்சினை குறித்து திங்கட்கிழமையன்று (30-ஆம் தேதி) நீதிமன்றத்தில் குறிப்பிடுங் கள் என நீதிபதிகள் கூறி, வழக்கு விசா ரணையை ஒத்தி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner