எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி அக். 27  இசுலாமியர்களின் இடு காட்டிற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், டில்லியில் நகரின் மத்தியில் உள்ள ஹுமாயூன் நினைவு மண்டபத்தை இடித்துவிட்டு அந்த பகுதியை இசுலாமி யர்களின் இடுகாட்டுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கித்தரவேண்டும் என்று இசுலாமிய அமைப்பு ஒன்று மோடிக்கு கடிதம் எழுதி யுள்ளது.

புகழ்பெற்ற கட்டங்களை இடிக்கத் துடிக்கும் இந்துத்துவ அமைப்பினரை நையாண்டி செய்யும் விதமாக மோடிக்கு கடிதம் எழுதிய வக்புவாரியம் டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் ஹுமாயூன் ஸ்தூபி.  இது 1569-- 70களில் ஹுமாயூனின் மனைவி ஹாஜி பேகம் என்பவரால் அவரது கணவரின் நினைவாக கட்டப்பட்டது. 

இந்த மண்டபம் எழுப்பப்பட்ட பிறகு ராணி ஹாஜி பேகம் இறந்த போதும் இங்கே தான் அடக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு பல முகலாய மன்னர்கள், அரசிகள், மற்றும் இளவரசர்களும் இங்கே அடக்கம் செய்யப்பட்டனர். அக்காலத்தில் இது முகலாய மன்னர் குடும்பத்தின் முக்கிய இடமாக மாறியது.

ஹுமாயூன் நினைவு மண்டபம் பல அழகிய சிறிய மண்டபங்களுடன் முக்கிய சுற்றுலாத் தலமாக பிற்காலத்தில் மாறியது.  இதன் அழகு மற்றும் கலைநுட்பம் பழமை காரணமாக  யுனெஸ்கோ அமைப்பால் 1993- உலகத்தின் புராதனக் கட்டடம் என அறிவித்தது. 

இந்த புராதான கட்டடமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் நீண்ட நாட்களாகவே இந்துத்துவ அமைப்பினரால் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாயின.

இந்தநிலையில் அக்டோபர் 15ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் அகில இந்திய ரப்தா ஈ மஜித் மற்றும் மதரசே இசுலாமியா ஆகிய இரு இசுலாமிய அமைப்புகளும் இசுலாமியர்களுக்கான இடுகாட்டில் இட வசதி செய்து தரவேண்டும் என உத்தரப் பிரதேச மத்திய ஷியா வக்ஃப் போர்டை கேட்டுக் கொண்டது. 

அந்த இட வசதிக்காக உபயோகப் படுத்தாமல் உள்ள பழைய இசுலாமிய இடுகாட்டில் உள்ள கட்டடங்களை இடித்து விட்டு அந்த இடத்தை அளிக் கலாம் எனவும் யோசனை தெரிவித்தது. இந்த இட ஒதுக்கீடு தலைநகரிலோ மற் றும் அருகில் உள்ள இடங்களிலோ இடம் கேட்டிருந்தது.

ஷியா போர்ட் பல இடங்களையும் ஆய்வு செய்து விட்டு இறுதியாக டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூன் நினைவுமண்டபத்தை இடித்து விட்டு அந்த இடத்தை இசுலாமியர்கள் இடுகாடாக உபயோகிக்கலாம் என யோ சனை தெரிவித்தது.   தனது யோசனையை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தது.  இது குறித்து போர்ட் அந்த கடிதத்தின் நகலுடன் தகவல் தெரிவித்துள்ளது.

போர்ட் தெரிவிப்பது, ஹுமாயூன் நினைவு மண்டபம் என்பது மதச் சம்பந்தப்பட்ட இடம் இல்லை.  அது ஏற்கனவே இடுகாடாக பயன்படுத்திய இடம் தான்.   அங்கு புதைக்கப்பட்டிருக்கும் முகலாயர்கள் இந்தியாவை திருட வந்தவர்கள்.  

ஏற்கனவே ஆட்சி புரிந்த அரசர்களை அழித்து தங்கள் அரசை அமைத்தார்கள்.  இங்கிருந்து திருடிய சொத்துக்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றவர்கள்.   தவிர அவர்கள் இசுலாமிய தூதர்களோ திறமையான ஆட்சியாளர்களோ இல்லை.  அதனால் அந்த சமாதிகள் புராதனக் கட்டடம் என்னும் பெருமைக்கு பொருத்த மானவை அல்ல.

மேலும் இசுலாமிய மத நெறிப்படி இவைகள் கட்டப்பட வில்லை.  எத்த னையோ கோயில்களை இடித்தவர்களின் சமாதிகளை இடிப்பதில் தவறில்லை.  தேவை இல்லாமல் அரசு இந்த ஸ்தூபி களை பராமரிக்க செலவு செய்து வருகிறது.  இது போல பணத்தை வீணாக்குவதை விட அதை புராதனக் கட்டிடங்கள் பட்டி யலில் இருந்து விலக்கி விட்டு இடித்து விடலாம்.  அதன் மூலம் இசுலாமிய மக்கள் பயன் பெருவார்கள்.  என காரணம் கூறி உள்ளது.

இது குறித்து பிரதமர் மோடியோ அல்லது பிரதமரின் அலுவலக அதிகாரி களோ இதுவரை தகவல் எதுவும் தெரி விக்கவில்லை.
தாஜ்மகால், மதூரா மசூதி, வாரணாசி மசூதிகளுக்கு ஆபத்து 

சமீபத்தில் உபி அரசு சுற்றுலா பட்டி யலில் இருந்து தாஜ்மகாலை அகற்றியபிறகு தாஜ்மகால் குறித்த விவாதங்கள் நாளிதழ் களின் பக்கங்களை நிரப்பியது.  முக்கிய மாக பாஜகவினர் அந்தக்கட்டிடம் அடிமையின் சின்னம் என்று கூறிவந்தனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் கிஷோர் தாஜ்மகால் சிவன்கோவில் என்று தேஜோமகாலயம் என்று அதற்கு பெயர் இருந்த்தாகவும், அதை தாஜ்மகால் என்று ஷாஜகான் மாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார்.  

உத்திரப்பிரதேச முதல்வரான சாமியார் ஆதித்யநாத் தான் வாரணாசிக்குப் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் மசூதியைப் பார்த்து அவமானத்தில் மனம் நொந்து போவேன் என்று 2014-ஆம் ஆண்டு கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் முதல் வராக பதவியேற்றுள்ளார். 

இசுலாமியா வழிபாட்டுத்தலங்கள், இசுலாமிய நினைவு கட்டடங்களை இடிக்கும் திட்டத்துடன் தற்போதைய பாஜக முனைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசை நையாண்டி செய்யும் விதமாக இசுலாமிய அமைப்பே புகழ்பெற்ற ஹுமாயூன் நினைவு மண்டபத்தை இடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner