எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.28 நலத் திட்டங்களுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதி மன்றத்தில் மேற்கு வங்க அரசு தொடுத்துள்ள வழக்கு மீது வரும் 30-ஆம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது.

அரசு நலத் திட்டங்களுக்கு ஆதாரை மத்திய அரசு கட் டாயமாக்கி வருவதற்கும், செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என வலி யுறுத்தி வெளியிடப்பட்டுள்ள உத்தரவை எதிர்த்தும் உச்ச நீதி மன்றத்தில் ஏராளமான மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், உச்ச நீதிமன் றத்தில் மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலை மையிலான அரசு சார்பிலும், அரசின் சமூக நலத் திட்டங் களுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த வழக் குரைஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, டில்லியில் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “ஆதார் இல்லை யெனில், அரசு சமூக நலத் திட்டங்களை அளிக்கக் கூடாது என்ற சட்டப்பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதி மன்றத்தில் மேற்கு வங்க அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனு வரும் 30-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது’ என்றார்.

முன்னதாக, கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரசு கட்சி யின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியபோது, செல் லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பது தொடர் பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

தனது செல்லிடப்பேசி எண் சேவை துண்டிக்கப்பட்டாலும், அந்த எண்ணுடன் ஆதாரை இணைக்க மாட்டேன் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

இந்தச் சூழ்நிலையில், ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனுத் தாக்கல் செய் துள்ளது. உச்ச நீதி மன்றத்தில் இதுதொடர்பான வழக்கு ஒன்றின்மீது கடந்த 25-ஆம் தேதி விசாரணை நடை பெற்றபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால், அரசு நலத்திட்டங் களுக்கு ஆதாரை இணைப்பதற்கு விதிக்கப்பட் டுள்ள காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட இருப் பதாக தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner