எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, அக். 30- நாடு முழுவதும் பாஜக வினர் சுதந்திரமாக கருத்துகளை வெளி யிடும் நபர்கள் மீது தொடர்ந்து தாக்கு தல் நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்கரில் ஊழல் மற்றும் பாலி யல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக் கிய பாஜக அமைச்சர் மீது புகார் கொடுத்த பிரபல ஊடகவியாளார் வினோத் வர்மா கைது செய்யப்பட்டார். மும்பையில் தொலைக்காட்சியில் மோடி போல் மிமிக்கிரி செய்த பிரபல மிமிக்ரி சியாம் ரங்கீலா நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற் றினர். இந்திய பிரதமர் மோடியை விமர்சித்தால் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்படும் என்று பாஜக அமைச் சர் மிரட்டியுள்ளார். இது பற்றிய விவ ரங்கள் வருமாறு:

அமைச்சர்களின் உண்மைமுகத்தை தோலுரித்த ஊடகவியலாளர் கைதுபிபிசி இந்தி உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களில் சிறப்பு செய்தியாளராக பணியாற்றியவர் வினேத்வர்மா. இவர் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சுமத் தப்பட்ட குற்றங்களுக்கு தீர்வு காணும் விதமாக புலனாய்வு மேற்கெண்டு வருகிறார். மேலும், சமீபத்தில் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநில உள்துறை மற் றும் தொழில்துறையை கைவசம் வைத் திருக்கும் ராஜேஷ் முன்னாத், அவரிடம் வேலைகேட்டு வந்த இளம்பெண் ஒரு வரை வலுக்கட்டாயமாக பாலியல் வன் புணர்வு செய்தார் இச்சம்பவம் வீட்டில் பணிபுரியும் ஒருவரால் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டது. இந்த வீடி யோவை அரசியல் அழுத்தங்கள் பற்றி புலனாய்வு செய்துவரும் ஊடகவியலா ளர் வினோத்வர்மாவுக்கு கிடைத்தது. இது தொடர்பாக அவர் ஊடகங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கும் பணியில் இருந்தார். இந்த நிலையில் வெள்ளிக் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காஷியாபாத்தில் உள்ள அவரது இல்லத் தில், அங்குள்ள சிலரை மிரட்டி பணம் பறித்தாக வினேத் வர்மாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் எந்த ஒரு நீதிமன்ற உத்தர வுமின்றி அவரது வீட்டை சோதனை செய்து கணினி மற்றும் குறுந்தகடுகளை பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்த பென்டிரைவ் சிலவும் கைப்பற்றப்பட் டது.

இது குறித்து வினேத் வர்மா கூறு கையில், தன்னிடம் சத்தீஸ்கர் அமைச்சர் ராஜேஷ் முன்னாத் என்பவருடைய ஆபாச குறுந்தகடு இருப்பதாகவும், இதற்காகவே தன்னை காவல்துறையி னர் கைது செய்ததாகவும் கூறினார்.  
இவர் கைது செய்ததை கண்டித்து டில்லி மற்றும் மும்பையில் பல்வேறு ஊடகத்துறையினர் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர். பிபிசியில் இவர் பாஜக ஆட்சியின் அவலங்கள் குறித்து எழுதிய பல கட்டுரைகள் விடுதலை மற்றும் உண்மையில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி வந்திருந்தது.

மோடி போன்று பேசக்கூடாது


பிரபல இந்தி தொலைக்காட்சி தி கிரேட் இந்தியன் லாபர் சேலஞ்ச் (சிறந்த நகைச்சுவைக் கலைஞர்) போட்டி நிகழ்ச் சியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சியாம் ரங்கீலா என்பவர் கலந்துகொண்டார். இவர் ராஜஸ்தானில் மிகவும் புகழ் பெற்ற மிமிக்ரி கலைஞர் ஆவார். இவர் மோடி போன்று பேசுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். மோடியின் மன்கி பாத் நிகழ்ச்சியை இவர்தான்  நடத்துகி றாரோ என்ற சந்தேகம் எழுந்ததாக ஆம் ஆத்மி கட்சி ஒருமுறை ஊடகத்தில் கூறியிருந்தது. 

இந்த நிலையில் இவர் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தார். மும் பைக்கு வருகை தந்த இவரிடம் மிமிக்ரி செய்துகாட்டுமாறு நிகழ்ச்சி ஏற்பட்டா ளர்கள் கூறினார்கள். இவர் மோடி போன்று அச்சு அசலாகப் பேசினார். இதனிடையே நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மோடி போன்று பேசக்கூடாது. வேண்டு மென்றால் ராகுல் போல் பேசு என்று கூறியுள்ளனர். அதற்கு அவர் நான் மோடி போல் பேசுவதில் கைதேர்ந்த வன். ஒருவரைப் போல் மிமிக்ரி பேசு வதுதான் மிமிக்ரி கலைஞனின் தனிச் சிறப்பு ஆனால் நீங்கள் அதற்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்களே என்று கேட் டுள்ளார். இறுதியில் அவர் அந்த நிகழ்ச் சியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளி யேற்றப்பட்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, "நான் ஒரு நிகழ்ச்சிக்கான கதைய மைப்பை உருவாக்கியிருந்தேன். அதில் மோடி மக்களிடம் பேசுவது போன்ற ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாகும், முத லில் என்னுடைய கதையமைப்பக் கேட்ட ஏற்பாட்டாளர்கள், மோடி பற்றி பேசக்கூடாது, ராகுல் போன்று பேசும் ஒரு கதையை கொண்டுவரமுடியுமா என்றார்கள். நான் உடனடியாக முடி யாது, வேண்டுமென்றால் எனக்கு அவ காசம் கொடுங்கள். ஆனால் மோடி பேசு வது போன்ற கதையமைப்பில் யாரை யும் நான் புண்படுத்துவது போன்றோ, அரசியல் செய்வது போன்றோ இதில் இல்லையே என்று கூறினேன். மறுநாள் என்னை வரச்சொன்னார்கள், மறுநாள் நான் படப்பிடிப்பு நிலையத்திற்குச் சென்றபோது என்னை உள்ளேயே விட வில்லை, நான் எனக்குள்ள அனுமதி கடிதத்தை காண்பித்தும் அனுமதிக்க வில்லை, பிறகு சிலர் என்னை உள்ளே விட அனுமதிக்குமாறு பாதுகாவலர்க ளிடம் கூறினார்கள் இதனை அடுத்து நான் உள்ளே சென்று ஒத்திகை மேடை யில் ஏறினேன் அங்கு என்னைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலுக்கட்டா யமாக என்னை வெளியேற்றினர். இத னால் நான் மிகவும் அவமரியாதைக் குள்ளானேன்" என்று கூறினார்.

மோடியை விமர்சித்தால் தேசதுரோக வழக்கு! பாஜக அமைச்சர் மிரட்டல்

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் குறித்து விமர்சனம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப் படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவின் வாஷிங்டன் சாலைகளை விடச் சிறப் பாக உள்ளது என்று முதல்வர் சவுகான் தெரிவித்திருந்தார். முதல்வரின் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அருண் யாதவ் மற்றும் மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர். சமூக வலைத் தளங்களிலும் பலர் கேலி, கிண்டல் செய்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் கூறுகையில், "சமீபத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மோடியின் வழியில்  சிவ்ராஜ்சிங் சவு கான் அமெரிக்கா சென்று பிற மாநிலங் களை விட ஊரக துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளில் மத்திய பிர தேசம் சிறந்து விளங்குகிறது. முதலீடு களை கவருவதற்காக முதல்வர் சில கருத்துக்களை தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் எதிர்கட்சியினர் மோடியின் செயல் மற்றும் மபி முதல்வரின் செயல்களை ஏளனம் செய்துவருகின்றனர். எதிர்கட்சியினர் விமர்சனம் செய்ததில் தேசத் துரோகம் உள்ளது. ஆகவே அவர்கள் மீது தேசத் துரோக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தமிழகத்தில் ஒரு திரைப்படத்தில் சில நொடிகளில் ஜிஎஸ்டி குறித்த வசனம் இடம் பெற்றதை அடுத்து தமிழக பாஜகவினர் அதில் நடித்த நடிகரை அவரது மதத்துடன் இணைத்து போலிச்செய்திகளை பரப்பிவிட்டனர். மேலும் திறைத்துறையினரை மிரட்ட வும் செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner