எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக். 31 மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஓராண்டில், ரியல் எஸ்டேட் துறையில், இரு மடங்கு முதலீடுகள் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, குஷ்மன் அண்டு வேக்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:

உலகளவில், 400 நகரங்களில், ஜூன் இறுதி வரையிலான ஓராண்டில், ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், 4 சதவீதம் உயர்ந்து, 1.50 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதில், இந்தியாவில்,மும்பை, புனே, பெங்களூரு, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியம், சென்னை, அய்தராபாத் ஆகிய, ஆறு நகரங்களில் மேற்கொண்ட முதலீடு, 100 சதவீதம் உயர்ந்து, 287 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.இந்திய ரியல் எஸ்டேட் துறையில், அதிகளவில், அதாவது, 175 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, மும்பை, முதலிடத்தில் உள்ளது.

உலகளவில், 2016இல், 149ஆவது இடத்தில் இருந்த மும்பை, இந்தாண்டு, 81ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட ஆறு நகரங்களில், ரியல் எஸ்டேட் துறை முதலீடுகளில், வட அமெரிக்கா, 55 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளது. அய்ரோப்பிய நாடுகளின் பங்கு, 14 சதவீதமாக உள்ளது.

அதே சமயம், உள்நாட்டு முதலீடுகள் குறைந்துள்ளன.தற் போதைய பொருளாதார வளர்ச் சிக்கான காரணிகள், வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக உள்ளன

இந்நிலையிலும், இந்திய நகரங்களில், ரியல் எஸ்டேட் துறை, எதிர்பார்ப்பிற்கும் மேலாக, நடுத்தர காலம் முதல், நீண்ட காலம் வரை, சிறப்பான வளர்ச்சி வாய்ப்பை கொண்டுள்ள கார ணத்தால், முதலீடுகள் அதிகரித் துள்ளன.

மும்பை, டில்லி மற்றும் தலை நகர் பிராந்தியம், பெங்களூரு ஆகிய வளர்ந்த நகரங்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகளில், பெரும் பங்கை ஈர்த்துள்ளன. அதே சமயம், சென்னை, அய்தராபாத், புனே நகரங்களிலும், முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner