எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.2நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்று சேர்ந்து நவம்பர் 8 ஆம் தேதியை கருப்பு தினமாக கடைப் பிடிக் கின்றன. இந்த பணமதிப்பு நீக்க நடவடிக் கையின் தோல்வியை மறைக்க பாஜக அதை கருப்பு பண ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்க போகிறது.
இந்நிலையில் புதுதில்லியில் பண மதிப்பு நீக்கம் அமல்படுத்தி ஓராண்டுக்கு பின்னர் அதன் தாக்கத்தினை ஆய்வு செய்த பொருளாதார ஆய்வு அமைப்பு டில்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நவம்பர் 8 ஆம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கவே உயர் பண மதிப்பு நீக்கத்தை நடைமுறைப் படுத்துவதாக கூறிய மோடி இதுவரை எவ்வளவு கருப்பு பணம் வந்துள்ளது என்பதை கூறவேயில்லை.கருப்பு பணம் என்பது வெறும் பண நோட்டுக்களாக இருக்காது. அது 95 சதவீதம் பங்கு பத்திரங் களாகவோ, தங்கமாகவோ, நிலம் மற்றும் மனைகளாகவோ தான் இருக்கும்.

எனவே பண நோட்டுகளை ஒழிப்பது என்பது எந்த நாட்டி லும் நடைபெற்றதாக சான்றுகள் இல்லை என்ற பொருளாதார நிபுணர்களின் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் இதுவரை பதிலே இல்லை.

கருப்பு பண ஒழிப்பு என்பது எதிர் மறையாகவே செயலாற்றி யுள்ளது. பல கருப்பு பண முதலைகள் தங்களுடைய கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக் கொள்ளவே அது உதவியுள்ளது.

பாஜக கட்சி தலைவர்களும் கட்சியினரும் மோடியின் அறி வுரையின்படி எவ்வளவு பணத் தை வங்கிகளில் போட்டுள்ளனர் என்பதையும் ஏன் மோடி அரசு கூற மறுக்கிறது என்பது தெரிய வில்லை.

கருப்பு பண மதிப்பு ஏன் பணமில்லாத பொருளாதாரம், அதாவது டிஜிட்டல் மூலமான பரிவார்த்தனையாக மாற்றப் பட்டது?
பின்னர் டிஜிட்டலுக்கு மாறுங்கள் என்று முன்பு அளித்த அழுத்தம் பின்னர் படிப்படியாக கைவிடப்பட்டது ஏன்? கருப்பு பண ஒழிப்பிற்கு பின்னர் வரு மான வரி செலுத்துவோரின் எண் ணிக்கையாவது கூடியிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
கருப்பு பண ஒழிப்பு அல்லது பண மதிப்பு நீக்கம் பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் நடக் கும் யுத்தம் என்று மோடி திருப்பி திருப்பி கூறிய வசனங்கள் 10 லட்சம் கோடி கடன் வாங்கிய 50 கார்ப்பரேட்டுகளுக்கு அக்கடன் கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின் னர் என்னவாயிற்று.

யஷ்வந்த் சின்கா, குரு மூர்த்தி, அருண் ஷோரி போன் றோர் பணமதிப்பு நீக்கம் கடுமையாக நாட்டின் பொருளா தாரத்தை பாதித்துள்ளதே என்று கடுமையான கூறிய விமர்சனங் களுக்கும் எந்த பதிலுமில்லை.

எனவே நீங்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு மாபெரும் தோல்வி என்பதை இன்னும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner