எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.5 அய்ஆர்சிடிசி இணைய தளத் தில் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் அவர்கள் மாதம் தோறும் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆதாரைப் பதிவு செய்யாதவர்கள் ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துவிட்டது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

அய்ஆர்சிடிசி இணைய தளத்தில் கண்டிப்பாக ஆதாரைப் பதிவு செய்ய வேண் டிய அவசியம் இல்லை. ஒரு மாதத்தில் அதிகபட்சம் 6 டிக் கெட்டுகளை ஆதார் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஒரே மாதத்தில் 6-க்கும் மேல் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆதார் எண்ணைப் பதிவு செய்வது அவசியமாகும். அய்ஆர்சிடிசி இணையதளத்தில் பயனர் பெயர், கடவுச்சொல் அளித்து உள்ளே நுழைந்த பிறகு, 'மை புரோஃபைல்' பகுதியில் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வசதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை உறுதி செய்ய ஆதாருடன் இணைக்கப் பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு கடவுச்சொல் அனுப் பப்படும். அதனை இணைய தளத்தில் பதிவு செய்வதன் மூலம் ஆதாரை அய்ஆர்சிடிசி தளத்தில் இணைத்துக் கொள் ளலாம். ஒரு மாதத்தில் 6 டிக் கெட்டுகளுக்கு அதிகமாக முன் பதிவு செய்பவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அய்ஆர்சிடிசி இணையதளத் தில் பயண ஏற்பாட்டு நிறு வனம் நடத்தும் முகவர்கள் பலர் போலியாக பயனர்களை உருவாக்கி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய் கின்றனர். ஆதார் இணைப்பு மூலம் இதுபோன்ற போலி பயனர்கள் முற்றிலுமாக ஒழிக் கப்படுவார்கள்.

அய்ஆர்சிடிசி இணைய தளத்தில் இப்போது ஒரு டிக் கெட்டில் 6 பயணிகள் முன் பதிவு செய்ய முடியும். தட்கல் முறையில் ஒரு டிக்கெட்டில் 4 பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அய்ஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதாரை இணைப்பது கட்டா யம் என்று ரயில்வே அறிவித்தது. ஆனால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த நடைமுறை கைவிடப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner