எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாகான், நவ.7 இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர் தல் நாளை மறுநாள் நடக்கிறது. அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசு துணைத் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டார். அப்போது பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதா வது: மத்திய அரசு ஜிஎஸ்டியை மிகவும் சிக்கலான, வெறுப் படையும் விதத்தில் அமல் படுத்திவிட்டது. அதிகபட்ச மாக 28 விழுக்காடு வரை வரி விதித்து விட்டது. இதில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வதில் ஏற்படும் குழப்பம் காரணமாக ஏராளமான தொழில்கள் அழிந்துவிட்டன. இதைப்பற்றிக் கேட்டால் காங்கிரசு ஆதரவுடன் தான் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப் பட்டது என்று பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள். மோடி அரசு அமல்படுத்தியிருக் கும் ஜிஎஸ்டி வரி விகிதம் முந்தைய காங்கிரசு அரசு நிர்ணயித்தது அல்ல.

2019ஆம் ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர் தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது மக்களை கொடூரமாக பாதித் துள்ள ஜிஎஸ்டி வரியை ஒட்டு மொத்தமாக மாற்றி அமைப் போம். இதன் மூலம் ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள வணிகர்கள், நுகர் வோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நிம்மதி அளிப்போம். ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு தினமான நாளை  (நவ.8) காங்கிரசு போராட்டம் அறிவித்துள்ளது. இதனால் சிறிய தொழில்கள், இளை ஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் பாதிப்பையும் எடுத்து கூற உள்ளோம். இமாச் சலப் பிரதேசத்தில் ஊழல் பற்றி பிரதமர் மோடி அதிகமாக பேசிச்சென்று இருக்கிறார். அவரது தலைமையிலான நிதி ஆயோக் தான் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலம் இமாச்சலப்பிரதேசம் என்று அறிக்கை அளித்துள்ளது. கல்வி, சுகாதாரம், சுத்தத்தில் மற்ற மாநிலங்களை விட ஏன், குஜராத்தை விட அனைத்து வகையிலும் முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner