எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ. 7- “உத்தமபுத்திரர்கள், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர் கள், பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் குற் றச்சாட்டு உண்டா? விரலை நீட்ட முடி யுமா?” என்று ஓங்கிக் குரல் கொடுத் தவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பெரியதோர் உழல் பூகம்பம் வெடித்துக் கிளம்பிவிட்டது. “பனாமா நாட்டுப் பதுக்கல்” என்று பெயர் பெற் றுவிட்ட ஜெர்மன் நாட்டு ஏட்டுடன் 96 செய்தி நிறுவனங்கள் இதில் ஈடு பட்டு இந்தத் திடுக்கிடவைக்கும் ஊழல் எரிமலையை வெடிக்கச் செய்திருக்கின் றன. பிரதமர் மோடியோ “கப் சிப்!”

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அயல் நாட்டில் பணம் பதுக்கியவர்களின் எண் ணிக்கை பலமடங்கு உயர்ந்தது. ‘பார டைஸ் பேப்பர்ஸ்’ தகவலின் படி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 144 இந்தியர்கள் கள்ளப்பணத்தை போலியான அயல் நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய் தது கண்டுபிடிக்கப்பட்டது.

‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயல்நாடுகளில் சுமார் ரூ.24 லட்சம் கோடிகள் இந்திய தொழிலதிபர்களால் பனாமா நாட்டில் போலியான பல நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளதாக செய்தி வெளிவந்தது. அதில் அம்பானியின் உறவினர், அதா னியின் சகோதரர் அமிதாப்பச்சன் மற் றும் அவரது மருமகள் அய்ஸ்வர்யாராய் போன்றோரின் பெயர்கள் இருந்தன. இதுகுறித்து மத்திய அரசு இதுவரை வாயைத் திறக்கவில்லை.

இந்த நிலையில் “பாரடைஸ் பேப் பர்ஸ்”  என்ற மற்றொரு முறைகேடான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியின் செய்தித்தாள்  ஒன்று அயல்நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்த புலனாய்வைத் தொடங்கியது. இந்தப் புலனாய்விற்கு ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் நாளிதழுக்குத் துணையாக  உலகில் உள்ள 96 செய்தி நிறுவனங்களும் இணைந்து இந்தப் புலனாய்வை நடத்தியுள்ளன.  இதில் இந்திய செய்தித் தாளான “இந்தியன் எக்ஸ்பிரசும்” பங்கேற்று உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  பனாமா பேப்பர் ஊழலையும் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டிருந்தது குறிப் பிடத்தக்கது. இந்தப் புலனாய்வின்படி வெளிநாடுகளில் உள்ள வரிச் சலுகை களைப் பயன்படுத்தி உலகச் செல்வந் தர்கள் பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள தகவல்கள் வெளியாகி யுள் ளன.

பட்டியலில் 714 பிரமுகர்கள்


இந்தியாவில் மொத்தம் 714 பிர முகர்கள் கோடிக்கணக்கான பண ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாரடைஸ் பேப்பர்ஸ் தகவலில் வெளி யாகி உள்ளது.  மொத்தம் வெளியாகி யுள்ள 180 நாட்டிலுள்ளோர் பட்டியலில் இந்தியா 19ஆம் இடத்தைப் பிடித்துள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இந்தியர்களில் அமிதாப் பச் சன், விஜய் மல்லையா, சிவில் விமா னப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோரின் பெயர் களும் உள்ளன.  பிரபல பாலிவுட் நடிக ரும், சர்ச்சைக்குரியவருமான சஞ்சய் தத்தின் மனைவி மன்யாதாதத்,   நீராரா டியா ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தத் தகவல்களை பாரடைஸ் பேப்பர்ஸின் இந்தியப் பங்காளரான “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டுள் ளது.   அந்த செய்தித்தாளின் தகவலின் படி இதில் பல இந்திய முன்னணி நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளதா கத் தெரிய வந்துள்ளது.  ஜிந்தால் ஸ்டீல், அப்போலோ டயர்ஸ், ஹாவெல்ஸ், ஹிந்துஜாஸ்,  எம்மார் எம் ஆர் எஃப், வீடியோகோன், ஹிரானந்தானி குழு மம், மற்றும் டி.எஸ்.கன்ஸ்ட்ரக்சன்ஸ் போன்ற புகழ்பெற்ற இந்திய நிறுவனங் களும்  வெளிநாடுகளில் முதலீடு செய் துள்ளன எனக் கூறப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கோடிக்கணக்கன ரூபாய் பணம் வெளிநாட்டிற்கு முதலீடு என்ற பெயரில் சென்றுள்ளது,

பாரடைஸ் பேப்பர்ஸ்

உலகத்தில் உள்ள அரசியல் தலை வர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை கணக்கில் வராத பணத்தை பதுக்கிவைக்க அயல்நாடுகளில் போலி நிறுவனங்களைத் துவங்கி, அதில் முத லீடு செய்து வருகின்றனர். முக்கியமாக சுவிஸ் வங்கி தனது நாட்டிற்கு வரும் பணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த பிறகு ஆப்பிரிக்கா, சில தென் அமெரிக்கா நாடுகள் கருப்புப்பணத்தை வெள்ளையாக்கும் வசதிகளைச் செய்து வருகின்றன. முக்கியமாக பனாமா, மால்டா போன்ற நாடுகள் தங்களின் நாட்டிற்கு வருவாய் கிடைக்க இவ்வாறு சட்டவிரோதமான செயல்களுக்கு உடந்தையாக இருக்கின்றன.

2015-ஆம் ஆண்டு பனாமா நாட்டில் பல்வேறு நாடுகளின் பெரும் பணக் காரர்கள் போலியான நிறுவனங்களைத் துவங்கி  கோடிக்கணக்கில் தங்கள் பணத்தை அதில் முதலீடு செய்தது 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இதில் பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர் கள் இருந்த போதிலும் மோடி, அவர் கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் ஜெர்மன் நாட்டுப் புலனாய்வு ஊடகம் ஒன்றிற்கு மால்டா மற்றும் மொராக்கோ நாடுகளில் போலி யான நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்திருப்பது கண்ட றியப்பட்டுள்ளது.

15,000 பக்கங்கள்


இது குறித்த விவரங்கள் அடங்கிய 15 ஆயிரம் பக்கம் அடங்கிய ஆவணங் கள் அனைத்தும் உலகின் பல்வேறு புலனாய்வு ஊடகங்களுக்கு அனுப்பப் பட்டு ரகசியமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கு அனுப்பிய 3 ஆயிரம் பக்க ஆவணங் களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந் திய பிரபலங்களின் பெயர்கள் உள்ளன. இதில் இதுவரை 714 பேர்களின் பெயர் கள் வெளிவந்துள்ளன. மீதமுள்ளவர்க ளின் பெயர்கள் விரைவில் வெளிவர விருக்கிறது.

மோடியின் நெருங்கிய நண்பரும் சிக்கினார்

இதில் மிகவும் முக்கியமான பெயர் களில் ஒருவர் ரவீந்திர கிஷோர் சின்கா. நாடாளுமன்ற பாஜக உறுப்பினரான இவர் மோடியின் மிக நெருங்கிய நண் பரும் கூட; பீகாரில் பாஜக - நிதீஷ்குமார் கூட்டணிக்கு மிகவும் முக்கிய பங்கு வகித்தவர். மேலும் இவர் ஆஸ்திரே லியாவிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.  இவர் நிதீஷ் குமாருக்கும், இதர கட்சிப் பிரமுகர் களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் களை பாஜகவுடன் கூட்டணி வைக்க ஊழலாக கொடுத்துள்ளார் என்று லாலுபிரசாத் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவர் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்துள்ளதாக பாரடைஸ் பேப்பர்ஸ் சில் இவரது பெயர் வெளியாகியுள்ளதன் மூலமாக லாலுவின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது புலனாகியுள்ளது. இவர்கள் மூலம் குறைந்த பட்சம் ரூ.30 லட்சம் கோடிகள் வரை அயல்நாட்டிற் குச் சென்றிருக்கலாம் என ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் கண்டிபிடிக்கப்பட்டுள் ளதாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஊடகப் புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது.

ஊழல் பிஜேபி பெருச்சாளி உண்ணாவிரதமாம்

வெளிநாட்டில் உள்ள போலி நிறு வனங்களில் கருப்புப்பணத்தை முதலீடு செய்தவர்கள் குறித்த “பாரடைஸ் பேப்பர்ஸ்” என்ற புலானாய்வில் பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கிசோர் சின்கா பெயரும் உள்ளது.

பீகாரைச் சேர்ந்த மாநிலங்களவை பா.ஜ.க. உறுப்பினரான ரவீந்திர கிசோர் சின்கா எஸ்அய்எஸ் செக்யூரிட்டி சர்வீஸ் என்ற நிறுவனத்தை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தி வருகிறார். எஸ்விஎஸ் ஆசியா பசிபிப் ஹேல்டிங்ஸ் என்ற நிறுவனம் அய்ரோப்பாவில் உள்ள மால்டா நாட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக சின்கா மற்றும் அவரது மனைவி ரீட்டா கிஷோர் உள்ளனர். இந்த நிறுவனத்துடன் தனக்கும் தனது மனைவிக்கும் உள்ள தொடர்பை கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட வில்லை. மக்களவை உறுப்பினர் ஆன பிறகும் இதை வெளியிடவில்லை.

ஆனால், 2017ஆம் ஆண்டில் எஸ்அய்எஸ் நிறுவனத்தின் ஆவணங் களை இந்திய பங்கு சந்தைவாரியத்திடம் வழங்கினார். அதில் மால்டா நிறுவனத் தில் உள்ள தொடர்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற 
புலனாய்வு செய்தி மூலம் கசிந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அவரிடம் தொலைபேசி வழியே விளக்கம் கேட்க முற்பட்டது, அப்போது அதன் உதவியா ளர், ஊடகத்தினரை நேரில் அழைத்தார். ஊழல் குறித்து தன்விளக்கம் தருவதற் காக அழைத்துள்ளார் என்று பாட்னாவில் உள்ள மக்களவை உறுப்பினர் வீட்டில் ஊடகவியாளர்கள் குவிந்துவிட்டனர்.  ஊடகவியாளர்களுக்கு முன்பாக வந்த அவர், ஒரு துண்டுச்சீட்டில் நான் பகவத யஞ்னா விரதம் இருக்கிறேன், ஆகவே நான் இன்னும் 7 நாட்களுக்கு யாரிடமும் பேசமாட்டேன் என்று எழுதிக் காண் பித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். பிறகு காரில் ஏறிவெளியே சென்ற அவ ரிடம் மீண்டும் பேச முயன்றபோது காரி லிருந்து அந்த துண்டுச்சீட்டினை காண் பித்து விட்டு மனைவியுடன் சென்று விட்டார்.    

மோடியின் மிக நெருங்கிய நண்ப ரான ரவீந்திர கிசோர் சின்கா பீகாரில் பாஜக அய்க்கிய ஜனதாதளம் கூட்டணி அமைக்க நிதீஷ்குமாருக்கும் இதர கட்சிப் பிரமுகர்களுக்கு கோடிக்கணக் கான ரூபாய் பணத்தை பாஜகவுடன் கூட்டணி வைக்க லஞ்சமாக கொடுத்தார் என்று லாலுபிரசாத் குற்றம் சாட்டியி ருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner