எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ. 13- காற்று மாசு பிரச்சினை, டில்லியில் தீவிர மடைந்து வரும் நிலையில், சுவாசக் கோளாறு தொடர்பாக, மருத்துவமனைகளில் அதிக ளவு நோயாளிகள் குவிகின்ற னர்.

டில்லியில், முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது. இங்கு, காற்று மாசு மிக மோசமடைந்து உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள் ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு உள்ளது. இந்நிலையில், மூச்சுத் திணறல் போன்ற பல் வேறு நோய்களால் பாதிக்கப் பட்டு, மருத்துவ மனைகளில் அதிகளவு நோயாளிகள் குவி கின்றனர். டில்லியில் உள்ள அரசு மருத்துவமனையான, வல்லபாய் படேல் மருத்துவ மனையில், ஒரு வாரத்தில் மட் டும், 300க்கும் மேற்பட்டோர், மூச்சுத் திணறல் போன்ற நோய் களுக்கு சிகிச்சை பெற்றுஉள் ளனர். இது, வழக்கத்தை விட, 3 மடங்கு அதிகம் என, மருத் துவர்கள் தெரிவித்தனர்.

டில்லியைச் சேர்ந்த, பிரபல டாக்டர், அரவிந்த் குமார் கூறி யதாவது: காற்று மாசடைவ தால், அதில் உள்ள நச்சுப் பொருட்களை நாம் சுவாசிக் கும் போது, அவை, உடலுக் குள் புகுந்துவிடும். இதனால், நுரையீரல் போன்றவை பாதிக் கும். காற்று மாசால், உடனடி யாக எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால்தான், யாரும் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. அதே நேரத்தில், அது மெதுவாக நம் உயிரைக் கொல் லும். நச்சுக் காற்றை தொடர்ந்து, 10 நாட்கள் சுவாசித்தால், ஒரு வரது ஆயுட்காலம், சில வாரங் கள் அல்லது மாதக் கணக்கில் குறைந்துவிடும். சுகாதாரம் குறித்து அக்கறை உள்ளவராக இருந்தால், நல்ல ஆரோக்கிய மான வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைத்தால், நீங்கள் வசிப்பதற் கான இடம் டில்லி அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு, அண்டை மாநில மான, பஞ்சாபில் அறுவடைக்கு பின், பயிர்களை எரிப்பது முக் கியமான காரணமாக உள்ளது. அறுவடைக்கு பின், வைக் கோல்களை எரிப்பதை தடுக் கும் வகையில், சூப்பர், எஸ். எம்.எஸ்., எனப்படும், சூப்பர் வைக்கோல் நிர்வாக முறை என்ற கருவியை பயன்படுத் துவதை, பஞ்சாப் அரசு ஊக் குவிக்கிறது. இதற்காக, 50 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், இதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய சூழ்நிலையில், பஞ்சாபில், 1.6 சதவீத பயிர் விளைச்சல் பரப்பளவில் மட் டுமே, இந்தக் கருவி பயன் படுத்தப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner