எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.17  இந்தியா வில், அமைப்பு சார்ந்த துறை களில் மேற்கொள்ளப்படும் சில்லரை விற்பனை, 2020இல், 1 லட்சம் கோடி டாலரை எட்டும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, அசோசெம்  எம்.ஆர்.ஆர்.எஸ்., இந்தியா டாட் காம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாறி வரும் மக்களின் வாழ்க்கை பாணியும், உயர்ந்து வரும் நடுத்தர மக்களின் வருவாயும், சில ஆண்டுகளாக, நுகர்பொ ருட்கள் துறையின் வேகமான வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது.

இதன் வளர்ச்சி, ஒட்டுமொத்த சில்லரை விற்பனை துறையின் மேம்பாட்டுக்கு வித்திடும்.

இதன் காரணமாக, தற்போது, 67,200 கோடி டாலர் மதிப்பிலான, சில்லரை விற்பனை சந்தை, ஆண்டுக்கு, 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2020இல், 1.10 லட்சம் கோடி டாலராக உயரும்.

இத்துடன், நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் வரு வாயும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும்.

மக்களின், அவசிய தேவை களை பூர்த்தி செய்யும் நுகர் பொருட்கள் சந்தையின் மதிப்பு, 2016இல், 4,900 கோடி டாலராக இருந்தது. இது, ஆண்டுக்கு, சராசரியாக, 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, அடுத்த மூன்று ஆண்டு களில், 10,370 கோடி டாலரை எட்டும். கிராமப் புறங்களில், 2,940 கோடி டாலர் மதிப்புடன் திகழும் நுகர்பொருட்கள் சந்தை, ஆண் டுக்கு சராசரியாக, 14.6 சதவீதம் வளர்ச்சிக் கண்டு, 2025இல், 22 ஆயிரம் கோடி டாலராக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner