எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ. 29- ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவ ராக மூத்த அய்.ஏ.எஸ். அதி காரி பிரதீப் சிங் கரோலா நிய மனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டுள் ளார். கருநாடக மாநிலத்தில் இருந்து அய்.எ.ஏஸ். பதவிக்கு தேர்வான இவர் தற்போது, பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக் குநராக உள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது இடைக்கால தலைவராக பதவி வகிக்கும் ராஜீவ் பன்சாலுக்கு பிறகு அவர் இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா நிறுவனத்தில் ராஜீவ் பன்சாலுக்கு ஏற் கெனவே மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இடைக்கால தலைவராக இருந்துவருகிறார். ஏர் இந்தியா வின் பங்குகளை விற்பதற்கான நடைமுறைகள் இறுதிப்படுத் தப்பட்டு வரும் நிலையில் பிரதீப் சிங் கரோலாவை மத் திய அரசு தலைவர் பதவியில் நியமித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக் கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஜூன் மாதத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்தது.

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.50,000 கோடிக்கும் அதிக மான கடனில் சிக்கியதைய டுத்து, முந்தைய அய்க்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சியில் சில நிபந்தனைகளின் அடிப் படையில் ரூ.30,231 கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் தெரி விக்கப்பட்டது.

2012இல் தொடங்கிய இந்த நிதி உதவி திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், இந்த திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனம் இதுவரையில் ரூ26,000 கோடி மதிப்பிலான நிதி உதவியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner