எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கான்பூர், டிச.2  முன்னணி இந்தி நாளிதழான ‘‘இந்துஸ்தான்'' பத் திரிகையில் முக்கிய செய்தியா ளராகப் பணியாற்றிவந்த நவீன் சிறீவாஸ்தவா அடையாளம் தெரி யாத நபர்களால் படுகொலை செய் யப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் முதல்வராக பதவி யேற்றது முதலே அங்கு வன் முறைகள் அதிகரித்தவாறு உள் ளன. ஆனால், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என் றும், குற்றம் செய்ய நினைப் பவர்களுக்கு சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன. ஆகவே, அவர்கள் அங்கு சென்று தங்கிக் கொள்ளலாம் அவர்களுக்கு குற்றம் புரியும் எண்ணம் நீங்கிய பிறகு சிறையிலிருந்து வெளியே வரலாம் என்றும் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிவருகிறார்.

ஆனால், இவரது மிரட்டல்கள் எல்லாம் சிறுபான்மை இனத்த வருக்காக மட்டுமே! பெரும்பாலான சமூக விரோதிகள் இந்துத்துவ அமைப்பின் அடையாளத்தில் துணிச்சலுடன் உலாவருகின்றனர்.

இந்நிலையில், இந்தி முன்னணி நாளிதழான ‘‘இந்துஸ்தான்'' இதழில் பணியாற்றிவரும் நவீன் சிறீவாஸ்தவா கான்பூர் நகரின் சாலையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்; பணி முடிந்து வழக்கம்போல் வீடு திரும்பிக்கொண்டு இருந்த இவரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்; தலை மற்றும் வயிறு முதுகு மற்றும் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுபட்டு சாலையில் விழுந்த அவரை, அங்கிருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் இப்படுகொலை தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையரிடம் விளக்கம் கேட் டுள்ளார். இக்கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

திரிபுரா, சத்தீஸ்கர், அரியானா போன்ற மாநிலங்களில் ஊடக வியலாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அக்டோபர் அய்ந் தாம்தேதிகருநாடகாவின்பிர பல பகுத்தறிவாளரும்,முற் போக்கு எழுத்தாளரும்பெண் ணுரிமைவாதியுமான ஊடகவிய லாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner