எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.5   புளு வேல் என்னும் இணையதள விளை யாட்டை நீக்க இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நீல திமிங்கலம் (புளு வேல்) என்னும் இணையதள விளை யாட்டில் ஈடுபட்ட இளம் வய தினர் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனால், அந்த விளை யாட்டை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இணைய நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி, குர்மீத் சிங் என்ற வழக்குரைஞர் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நீல திமிங்கல விளையாட்டை நீக்குமாறு கூகுள், யாகூ, மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங் களுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner