எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொறியியல் மற்றும் நிர்வாக மேலாண்மை படிப்புகளில் சமஸ்கிருதத்தை திணித்திட சிறப்பு மய்யமாம்


புதுடில்லி, டிச.5 டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப்பாடத்தைக் கற்பித்திட சிறப்பு மய்யம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாம்.

சமஸ்கிருத பாடத்துக்கான சிறப்பு மய்யத்தில் பொறியியல் மற்றும் நிர்வாக மேலாண்மை பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதப்பாடத்தை கற்பிக்க வேண் டும் என்று பல்கலைக் கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீ காரம் அளிக்கின்ற அகாடமிக் கவுன்சில் எனப்படும் கல்விக்குழுவின் அனுமதிக் குப்பின்னர் பொறியியல் மற்றும் நிர்வாக மேலாண்மை படிப்புகளில் சமஸ்கிருதப் பாடம் கற்பித்திட திட்டமிடப்பட்டுள்ளது.

சமஸ்கிருதக் கல்லூரிக்கும், இந்திய ஆய்வுப்பாடங்களிலும் சமஸ்கிருதப் பாடங்களை கற்பித்திடவும் கல்விக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதுகுறித்து ஜேஎன்யூ துணைவேந்தர் எம்.ஜெகதீஷ் குமார் குறிப்பிட்டதாவது:

`மேலாண்மை மற்றும் தொழில் முனைவோருக்கான கல்லூரியைத் தொடங்கி, முறைசாரா கண்டுபிடிப்பு களில் கவனம் செலுத்துகிறோம்.  அய்ந்து ஆண்டுகால ஒருங்கிணைந்த பொறியியல் கல்லூரியை யும் தொடங்க உள்ளோம்' என்றார்.

கல்விக்குழுவின் செயற்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்

கல்விக்குழுவின் அனுமதிக்காக பரிந் துரைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு கல்விக்குழு உறுப்பினர்களின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதக் கல்லூரி மற்றும் இந்திய ஆய்வுகளுக்கான பாடங்களுக்கான சிறப்பு மய்யம் இயங் கிட கல்விக்குழுவின் செயற்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும்.

ஜேஎன்யூ ஆசிரியர்கள் சங்கம்


அய்அய்டி கல்வி நிறுவனத்திலிருந்து ஜேஎன்யூ பொறியியல் பாடத்திட்டம் எப்படி வேறுபடுகிறது என்கிற எங்களின் கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை. பரிந்துரைக்கப்பட்ட சமஸ்கிருத பாடத் துக்கான மய்யம் அமைக்கப்படுவதுகுறித்து ஜேஎன்யூவின் ஆசிரியர்களுக்கு முறை யாக தெரிவிக்கப்படவில்லை.

அதேபோல், பொறியியல்  மற்றும் மேலாண்மை பாடத்திட்டங்கள்குறித்தும் ஜேஎன்யூ ஆசிரியர்களிடம் விவாதிக்கப் படவில்லை. அப்படி ஒரு திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து ஆசிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்படவில்லை. மேலும், அய்.அய்.டி, ஜேஈஈ  நடைமுறைகளைப் பின்பற்றாமல், நுழைவுத் தேர்வு நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.180 கோடி யுஜிசி ஒதுக்கீடு


பொறியியல், மேலாண்மை பாடங் களில் சமஸ்கிருத சிறப்பு மய்யத்துக்கு பல்கலைக்கழக மான்யக் குழு முழுமை யான ஒத்துழைப்பை அளிப்பதுடன், ரூ.180 கோடி   தொகையையும் வழங்க உறுதி அளித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner