எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.8 ஆங்கிலேயர் களுக்கு எதிராக போராடிய பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் இன்றுவரை தேசத்தின் தியாகி கள்தான் என்பது தகவல் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய விடுதலைக்காக போராடிய பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் ஆங்கி லேய அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய் யப்பட்டனர். 1931 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தூக்கி லிடப்பட்டனர். இந்நிலையில் ஜம்முவைச் சேர்ந்த ரோஹித் சவுத்ரி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார்.

அதில் நாட்டின் விடுதலைக்காக போரிட்ட பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் பயங்கரவாதி என குறிப்பிடப் பட்டுள்ளதா, அல்லது தியாகிகள் என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா என கேட்டு மனு செய்திருந்தார். அவரது மனுவிற்கு அளித்த பதிலில், நாட்டின் விடுதலைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் பங்களிப்பை எப்படி மறைக்கமுடியும். அவர்கள் இன்று வரை தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள்தான் என அரசு ஆவணங்களில் உள்ளன.

இவ்வாறுஅந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner