எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நூலின் ஆங்கில மொழியாக்க புத்தகம் அளிப்பு

டில்லி, ஜன.12 அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ரோகினியை சந்தித்தார்கள். அப்போது நீதிபதி ரோகினியிடம் தந்தை பெரியார் புத்தகங்கள் அளிக்கப்பட்டது.

டில்லியில் உள்ள பிற்படுத்தப் பட்டவர்களை வகைப்படுத்துவ தற்கான ஆணையத்தின் அலுவ லகத்தில் ஆணையத்தின் தலை வர் நீதிபதி ரோகினி மற்றும் டாக்டர் ஜே.கே.பாலாஜி, சைலேஷ் ஆகிய ஆணைய உறுப் பினர்களை அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணா நிதி, துணைப் பொதுச்செயலா ளர்கள் எம்.ஜார்ஜ் பெர்ணான்டஸ், தானா கர்ணா சாரி உள்ளிட்ட வர்கள் நேரில் சந்தித்தார்கள். அப்போது பிற்படுத்தபபட்ட  வர்களை வகைப்படுத்தல் குறித்து அகில இந்திய பிற் படுத்தப்பட்டவர்கள் நல சங்கங் களின் கூட்டமைப்பின் கருத்து ஆணையத் தலைவரிடம் அளிக் கப்பட்டது. இணை செயலாளர் பி.எல்.மீனா கோரிக்கை மனுவை அளித்தார்.

நீதிபதி ரோகினிக்கு கூட்ட மைப்பின் துணைப்பொதுச் செய லாளர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தந்தை பெரியார் புத்தகமான Ôபெண் ஏன் அடிமை யானாள்?Õ ஆங்கில மொழியாக்க புத்தகத்தை பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி  அளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner