எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பசுப்பாதுகாப்பு மசோதா விவகாரத்தில் சி.பி.அய். செயலாளர் டி ராஜா எம்.பி. ஆவேசம்!

புதுடில்லி, பிப்.3 சக மனிதர் களைக் கொல்ல பசுவை ஆயுத மாகப் பயன்படுத்துகின்றனர், பசுப்பாதுகாப்பு மசோதாவைக் கொண்டுவந்தால் ஆரியர் திரா விடர் விவாதத்தைக் கையிலெ டுக்க மத்திய அரசு நினைக்கிறதா? என்று மாநிலங்களவையில் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர் டி.ராஜா கடுமையாகச் சாடினார்.

மாநிலங்களவையில் பசுப் பாதுகாப்பு மசோதா, 2017 குறித்து பேசிய டி.ராஜா, சுப் பிரமணியன் சுவாமி கருத்தை எதிர்ப்பதா கவும், மசோதாவை கடுமையாக எதிர்ப் பதாகவும் தெரிவித் தார்: சக மனிதர் களைக் கொல்லுவ தற்கான வெறுப்பு ஆயுதமாக பசு பயன்படுத்தப்படு கிறது. சுப்பிர மணியன் சுவாமி இது பற்றி சிந்திக்க வேண்டும். சுவாமியை மத்திய அரசு ஆதரிக்கிறதா எதிர்க்கிறதா என்பதில் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

தலித்துகள், முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். மாநிலங்களவையில் நாம் இந்த கும்பல் படுகொலைகள் பற்றி விவாதித்துள்ளோம்.

இந்த மசோதா, பசுக் கண் காணிப்புத்துவத்தை நியாயப் படுத்துகிறது. இதுகுறித்த விவா தங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமி திரும்பிச் செல்ல வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவர் மகாத்மா காந்தி பெயரைப் பயன்படுத்தியது எனக்கு அதிர்ச் சியளித்தது. ஏன் சுவாமி எருமை களைப் பற்றி பேசவில்லை?

சுப்பிரமணியன் சுவாமி சொல்வதை மத்திய அரசு கேட்டு நடந்து கொண்டால் ஆரியர்கள் ஆரியர் அல்லாதோர் என்ற விவா தத்துக்கு நாம் திரும்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன். பசுவின் பெயரால் மக்களைப் பிரித்தாள்கிறீர்கள். நாடு ஏற்கெ னவே இதனால் துன் பங்களை அனுப வித்து விட்டது.

மக்கள் என்ன சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என்று அரசு ஆணையிட முடி யாது. இந்த மசோதா நிறைவேற் றப்பட்டால், நாடு சவாலான காலங்க ளுக்குள் செலுத்தப் படும். இந்திய தாயின் பெயரில் கேட்டுக் கொள்கிறேன். இந்த மசோதாவை தயவுகூர்ந்து மறுத்து விடுங்கள்.

முன்னதாக சுப்பிரமணியன் சுவாமி பேசும்போது, "பிரிட்டீஷார் கள்தான் பசுவைக் கொல்லுவதை ஒரு மோஸ்தராக உருவாக்கினார் கள். நவீன அறிவியல் கூறுகிறது பசுவினால் பல பயன்கள் உண்டு என்று. நவீன அலோபதி மருந் துகளைத் தயாரிக்க யூரியா பயன்படுத்தப் படுகிறது. பசுவின் சிறுநீரை மருந்தில் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கி யுள்ளது. நம் முன்னோர்களான ரிஷிகளும் பசுக்களின் முக்கியத் துவத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்தக் காரணங்களுக்காக பசுக் களை பாதுகாப்பது அவசியம்.

ஒவ்வொரு கிராமத்திலும் பசுப்பாதுகாப்பிடங்களை நாம் உருவாக்க வேண்டும். ஏனெனில் பசு இறைச்சிக்கு அதிகப்படியான ஏற்றுமதி விலை கிடைக்கிறது. எனவே கடும் தண்டனைகள் தேவைப்படுகிறது. மரண தண் டனை வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner