எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, பிப்.26 பொதுமக்கள் வங்கியில் சேமித்த பணத்தை கொள்ளையடிக்க மோடி வழி காட்டுகிறார் என்றார் அகில இந்திய காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி.

கருநாடக மாநிலத்தில் சித்த ராமையா தலைமையிலான காங் கிரசு ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விரைவில் தேர்தல் வர இருப்பதையடுத்து காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். பொதுக் கூட்டங்களில் பங் கேற்று பேசி வருகிறார்.

2- ஆம் கட்டமாக கருநாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சார சுற்றுப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். பெல காவியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

கருநாடகாவில் சித்தரா மையாதலைமையிலானகாங் கிரசு அரசு பல்வேறு நலத்திட் டங்களைநிறைவேற்றிஇருக் கிறது. ஊழலற்ற ஆட்சியால் கருநாடகம் பல துறைகளில் முன்னேற்றம்அடைந்துஇருக் கிறது. கடந்த சட்டசபை தேர்த லில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் சித்தராமையா நிறைவேற்றி உள்ளார்.

மத்தியில் ஆளும் மோடி அளித்தவாக்குறுதிகளைநிறை வேற்றவில்லை. வெளிநாடு களில் உள்ள கருப்பு பணத்தை மீட்பேன். ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும் என்றார். ஆனால் எதையும் செய்யவில்லை.

மோடியின் பண மதிப்பு நீக்கம்நடவடிக்கையால்மக்கள் கடும் துயரத்துக்கு ஆளானார்கள். வெயிலிலும்,குளிரிலும் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கி வாசலில் காத்திருந்து செலுத்தினர்.

இதைப் பார்த்து பெரும் தொழிலதிபர்கள்எளிதாகமக் களின் பணத்தை கொள்ளை யடித்து விட்டனர். நீரவ் மோடி, விஜய் மல்லையா போன் றவர்கள் வங்கியில் சேமித்த பணத்தை கொள்ளையடிக்க மோடியே வழிகாட்டுகிறார்.

பாரதீய ஜனதா ஆட்சியில் தொழில் அதிபர்கள் மக்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது வாடிக்கையாகி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner