எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.27 விஜய் மல் லையா, நீரவ் மோடி, மொகுல் கேசிக் போன்றவர்களைவிட அதிகமாக வங்கி மோசடி செய்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பிரதமருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்

மாநிலங்களவை உறுப்பினர் பவன்வர்மா

நீரவ்மோடி,விஜய்மல் லையா, லலித் மோடி, என நாட் டின் பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி, மோசடி செய்து தப்பியோடிவர்களின் பட்டியல் நீண்டு வருகிறது. ஆனால், இவர்களைவிட அதி கமாக வங்கிகளில் மோசடி செய்துவிட்டு, கவுதம் அதானி பிரதமருடனேசுற்றுகிறார் என்று மாநிலங்களவை உறுப்பினர் பவன்வர்மா நேரமில்லா நேரத் தில் (ஜீரோ அவர்ஸ்) பேசி யுள்ளார்.

2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மாநிலங்களவைக் கூட் டத்தில் நேரமில்லா நேரத்தில், அய்க்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பவன் வர்மா முக்கியமான ஒரு உரையை நிகழ்த்தினார். அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனர் கவுதம் அதானியின் மீது வங்கிகளில் பெற்ற வாராக்கடனைத் திரும்பச் செலுத்தாதது குறித்து பல்வேறு வங்கிகள் ரிசர்வ் வங்கியிலும், நிதிஅமைச்சகத்திலும்புகார் கொடுத்துள்ளனர்.அப்புகா ரின்நகல்கள்பிரதமர்அலு வலகத்திற்கும் அனுப்பட்டுள் ளன என்று கூறினார்

மேலும், பொதுத்துறை வங்கிகளில் அவர் திரும்பச் செலுத்தாத கோடிக்கணக்கான தொகையை பட்டியலிட்டார். தேசிய வங்கிகளில் கடன் வாங்கியகார்ப்பரேட்நிறுவ னங்கள் திருப்பி செலுத்தவேண் டிய கடன் தொகை மட்டும் ரூ.5 லட்சம் கோடி ஆகும். அதில் ஏறக்குறைய ரூ.1.4 லட்சம் கோடியை அய்ந்து நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தவில்லை.

அவை, ஜி.வி.கே., சுஜ் லான் எனர்ஜி, இந்துஸ்தான் கட்டுமான கம்பெனி மற் றும் அதானி குழுமம் ஆகி யன. அரசுக்கும் இந்த நிறு வனங்களுக்கும் இடையே என்ன உறவு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதானி மாதிரியான பெருமுத லாளிகள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கண்டு கொள்வதில்லை.

பிரதமரும் தான் எங்கு சென் றாலும், கூடவே அதானியை அழைத்துச் செல்கிறார், மேலும் வங்கிகள் அளித்த அந்தப்புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற ஒரு விளக்கமும் நிதி அமைச்சகத்திடம் இல்லை' என்றுகுற்றம்சாட்டினார்பவன் வர்மா. இந்த உரை நிகழ்த்தப் பட்டுகிட்டத்தட்டஇரண்டு ஆண்டுகள்கடந்துவிட்டன. இருந்தும் மேற்குறிப்பிட்டவர் கள் மீது எந்தவித நடவடிக் கையும் இல்லை.