எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மார்ச் 2 -மத்திய அரசு கூட்டியுள்ள, லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தில் பங் கேற்க முடியாது என்று காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சி யின் மக்களவைக்குழுத் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையான கடிதம் ஒன் றையும் எழுதியுள்ள கார்கே, எதிர்க்கட்சி களையும் கூட்டத்திற்கு அழைத்தோம் என்று வெறுமனே காகிதத்தில் எழுதி வைப் பதற்காகவே, சம்பிரதாயமான முறையில் இந்தக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள் ளதாகவும் சாடியுள்ளார்.

இப்போதுள்ள எம்.பி.க்களின் எண் ணிக்கைப்படி காங்கிரசு உட்பட எந்தக் கட்சியும் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இல்லை என்பதால், லோக்பால் அமைப்பை ஏற் படுத்த முடியவில்லை என்ற சாக்குப் போக்குகளையே மோடி அரசு கூறி வந்தது. தற்போது திடீரென, ஆட்சி முடிவடையும் தருவாயில், லோக்பால் அமைப்பை ஏற் படுத்துவதற்காக கூட்டம் ஒன்றைக் கூட் டியுள்ளது. அதற்கு காங்கிரசு கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் தான், கூட்டத்தில் பங்கேற்கப் போவ தில்லை என்று காங்கிரசு மக்களவைக்குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு அதிரடி கடிதம் ஒன்றை அனுப் பியுள்ளார். ஊழல் கண்காணிப்பு அமைப் பான லோக்பாலுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முக்கியமான பணியில் எதிர்க்கட்சிகள் இடம்பெற வேண்டும்;

ஆனால், என்னையும், காங்கிரசு கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும், சிறப்பு அழைப்பாளர் என்ற ரீதியில் மத்திய அரசு அழைத்து இருப்பது, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளை நிராகரிக்கும் நடவடிக் கையாகும்; லோக்பால் சட்டம் மற்றும் அதற்கான உறுப்பினர்களைத் தேர்வு செய் யும் பணியை நீர்த்துப் போகச் செய்வதாகும்;

எனவே, சிறப்பு அழைப்பாளர் என்ற பெயரில் இந்தக் கூட்டத்தில்பங்கேற்க முடி யாது என்று அந்த கடிதத்தில் கார்கே கூறி யுள்ளார். இதுவரை, லோக்பால் அமைப் புக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பெயர்கூட என்னிடம் அளிக்கப்படவில்லை; எந்தவிதமான முன்அறிவிப்பும் இல்லாமல் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; எனக்கு எந்தவிதமான தகவலும் கொடுக்கப் படவில்லை; எனவே, லோக்பால் அமைப் பில், எதிர்க்கட்சிகளை ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சி களும் கலந்துகொண்டதாக, காகிதத்தில் ஒப்புக்காக பதிவு செய்யும் முயற்சியாகவே மத்திய அரசின் நடவடிக்கை இருக்கிறது என்றும் கார்கே சாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலை யில், நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் பான்மை உள்ள கட்சியின் தலைவரே, லோக்பால் அமைப்பின் தேர்வுக்குழுவில் இடம்பெறும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர காங்கிரசு கட்சி பலமுறை வலியுறுத்தி இருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், லோக்பால் சட்டத்தைகடந்த 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றி, 2014-ஆம் ஆண்டு அது நடைமுறைக்கும் வந்துவிட்ட நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அந்த அமைப்பை செயல்படுத்தாமல், ஊழலை கட்டுப்படுத்த முயற்சி எடுக்காமல் இப் போது திடீரென உறுப்பினர்களைத் தேர்வு செய்திருப்பது ஏன்? என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner