எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூனைக்குட்டி வெளியில் வந்தது

ராமராஜ்ஜியம் அமைந்திடவே என்கவுன்ட்டர் கொலைகளாம்!

உ.பி.துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆணவம்

அலகாபாத், மார்ச் 5 உத்தரப்பிரதேச மாநிலத்தில்சாமியார் ஆதித்ய நாத் தலைமையில் பாஜக அரசுஅமைந்தபிறகுஅம் மாநிலம் முழுவதும் இந்துத் துவாவன்முறைகள்,தாழ்த் தப்பட்டமக்களுக்குஎதிரான வன்கொடுமைகள், தாக்குதல் கள் பெருகியவண்ணம் உள் ளன. மேலும் அம்மாநிலத்தில் என்கவுன்ட்டர் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

கடந்தஆண்டுமார்ச் மாதத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இது வரை 1,240 என்கவுன்ட்டர் கொலைகள் நடந்துள்ளன. 40 கிரிமினல் குற்றவாளிகள் கொல்லப்பட்டனர், 305 பேர் படுகாயமடைந்தனர்.

அம்மாநில துணை முதல் வர் கேசவ் பிரசாத் மவுரியா இதனை ஒப்புக்கொண்டு கூறியதாவது:

“இதுபோன்ற என்கவுன்ட் டர்கொலைகள்மூலம்கிரி மினல்குற்றவாளிகள்ஒழிக்கப் பட வேண்டும். அதன்மூலம் ராமராஜ்ஜியம் அமையும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதிப் படுத்த தேவையான நடவ டிக்கைகள் தீவிரமாக எடுக் கப்பட்டு வருகின்றன.

கிரிமினல் குற்றவாளிகளை சாகடிப்பதுஎங்களின்முதல் நோக்கமல்ல.ஆனாலும், ஆயுதமேந்தி காவல்துறை யினரைத் தாக்கும்போது, காவல்துறையினர் அவர்களை நோக்கி சுடுகிறார்கள். தீமையை அகற்றிவிட்டு, அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும் என்று மவுரியா கூறினார்.

உத்தரப்பிரதேசமாநிலத் தில் விசுவ இந்து பரிஷத், பா.ஜ.க. மாணவர் அமைப் பான ஏ.பி.வி.பி. இணைந்து குடியரசுதினத்தைமுன்னிட்டு கஸ்கஞ்ச் நகரில் நடத்திய பேரணியைத் தொடர்ந்து கல வரம் வெடித்தது. கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடை கள் பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலை ஏற் பட்டது.