எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 20- உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காவிட்டால் வரும் காலத்தில் தமிழகம் பாலைவனமாக மாறி விடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டில் லியில் நேற்று (19.3.2018) பத் திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாடு டில்லியில் தொடர்ந்து மூன்று தினங்களாக நடைபெற்றது.

நேற்று காங்கிரஸ் கட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள உறுப்பினர்கள் அனைவ ரும் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நிழற்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் தமிழ்நாடு காங் கிரசு தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சென்ற தமிழக உறுப்பினர்களும் இந்த நிழற் படம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து திருநாவுக்கரசர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி யின் மூன்று நாள் மாநாட்டு கூட்டமானது மிகவும் சிறப் பாக நடைபெற்றது. எதிர்வரும் தேர்தல்களில் வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என நடந்த மாநாட்டில் தீர் மானம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வாக்குச்சீட்டு முறையில் ஊழல் செய்ய முடி யாது என்பதால் தான். ஆனால் பாஜவினர் வாக்கு இயந்திரத் தில்தான் தொடர்ந்து ஊழலை அரங்கேற்றி வருகின்றனர் என் பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதைத்தவிர தமிழகத்தில் தற்போதே குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை யில் மத்திய அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழகம் வரும் காலத்தில் பாலைவன மாக மாறிவிடும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் கிடை யாது என அவர் கூறினார்.

இதேப்போல் மகிளா காங் கிரஸ் பொதுச்செயலாளரான விஜயதாரணி கூறும்போது, சிறப்பு சலுகை வழங்க வேண் டும் என சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது போல் தமிழக அரசு ஏன் காவிரி விவகாரத்தில் மத் திய அரசுக்கு அழுத்தம் தரக் கூடாது. மேலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பல்வேறு துறை சார்ந்த நிதிகளையும் மத் திய அரசிடம் இருந்து தமிழகம் விரைவில் கேட்டு பெற வேண் டும் என அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner