எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈட்டாவா, ஏப். 18- சாமியார் ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசில் இளம் சகோதரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கெலமாவா கிராமத்தில் இரு சகோதரிகள் 17 வயதில் ஒருவ ரும், 13 வயதில் மற்றொருவ ருமாக இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சகோதரிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே மாலை யில் சென்றவர்கள் நீண்ட நேர மாகியும் வீடு திரும்பவில்லை. இருப்பினும், கிராமத்தில் நடந்துகொண்டிருக்கின்ற திருமண விழாவுக்கு சென்றிருக் கலாம் என்று அவர்களின் குடும் பத்தார் அமைதியாக இருந்துள் ளனர். அடுத்த நாள் காலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் விவசாய வேலைக்காக சென்றனர். அப்போது கிராமத்திலிருந்து 500 மீட்டர் தொலை வில் அவ்விரு பெண்களும் பிணமாக இருப்பதைக்  கண்ட னர். அதன்பின்னர் அவர்களின் பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித் துள்ளனர்.

கொல்லப்பட்ட பெண்க ளின் தந்தை கூறியதாவது: எங் களின் குழந்தைகள் கொல்லப் பட்டதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தோம். எங் களுக்கு பகையாக எவரும் இல்லை. எங்கள் மகள்களை யார் எதற்காக கொன்றார்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

காவல்துறை மூத்த கண் காணிப்பாளர் அசோக் திரிபாதி கூறியதாவது:

கொல்லப்பட்ட இளம் பெண்களின் உடல்கள் உடற் கூறு ஆய்வுக்காக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டது. விசாரணை தொடங் கப்பட்டுள்ளது. அப்பெண்கள் பாலியல் வன்புணர்வு உள் ளாக்கப்பட்டுள்ளனரா என்று கிராமத்தினர் கேட்டுக்கொண் டிருக்கிறார்கள். உடற்கூறு ஆய்வு முடிவு வந்தால்தான் அதுகுறித்து தெரிய வரும். உடற்கூறு ஆய்வுக்காக காத்தி ருக்கிறோம் என்றார்.

அக்கிராமத்தை உள்ளடக் கிய சட்டப்பேரவை தொகுதி யின் உறுப்பினர் சரிதா பதாரியா  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபோது:

பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெறும் என் றும், சம்பந்தப்பட்ட குற்றவா ளிகள் விரைவில் கைது செய் யப்படுவார்கள். இது மிகவும் மோசமான நிகழ்வாகும். நீதிக் காக நானும் உங்களுடன் இருப் பேன். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner